- A R Rahman: ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு இப்படி ஒரு அவமானமா? புனே போலீசாருக்கு நெட்டிசன்கள் கண்டனம்!
மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ,ஆர்,ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அம்மாநில காவல் துறையினரால் நிறுத்தப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இச்சம்பவத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. காவல் துறையினர் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தும் இந்த வீடியோ இணையத்தில் நேற்று தொடங்கி ட்ரெண்டான நிலையில், தற்போது ஹாஷ்டேக் பகிர்ந்து இணையவாசிகள் மகாராஷ்டிரா காவல் துறையினருக்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் படிக்க
- The Kerala Story: 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை கேட்டு கேரள அரசு வழக்கு.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை உடனடி வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துள்ளனர். விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி”. அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் படிக்க
- Hrithik Roshan: 2 பக்கெட் ஜங்க் ஃபுட், சாக்லேட் சாப்பிட்டேன்... தூம் 2 பாடல் பற்றி சீக்ரெட் பகிர்ந்த ஹ்ரித்திக் ரோஷன்!
2000-களின் மத்தியில், பாலிவுட் தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவராலும் திரையரங்குகள் தொடங்கி பட்டி தொட்டியெல்லாம் கொண்டாடித் தீர்க்கப்பட்ட பாடல்களில் ஒன்று ஹிரித்திக் ரோஷனின் ‘தூம் மச்சாலே’. “26 மணிநேரத்துக்கும் மேல் இந்தப் பாடல் படமாக்கப்பட்டதாகவும், ஷூட்டிங் முடிந்ததும் தான் இரண்டு வாளிகள் நொறுக்குத் தீனி, சாக்லேட் உண்டதாகவும் ஹிரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- Serial Actress Shalini: 'ஸ்வீட் எடு.. கொண்டாடு..’ விவாகரத்தை கொண்டாடிய நடிகை.. மல்லுக்கட்டும் சோஷியல் மீடியா
சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் போட்டோஷூட் என்ற கலாச்சாரம் என்பது ட்ரெண்டாகி வருகிறது. பிறப்பு தொடங்கி இறப்பு வரை பல நிகழ்வுகளும் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடியுள்ளார்.மேலும் படிக்க
- Ashok Selvan : மின்னல்போல கடந்தாச்சு 10 ஆண்டுகள்.. இது இப்போ ட்ரெண்டிங்.. நெகிழ்ந்த அசோக் செல்வன்
தனது திரைவாழ்வின் 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை நடிகர் அசோக் செல்வன் ஒரு நெகிழ்ச்சியான குறிப்போடு கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 10 ஆண்டுகள் ஒரு மின்னல் போல் கடந்துவிட்டது. நல்ல, கடுமையான விஷயங்கள் பலவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. சிறு வெற்றிகள், கற்றுக் கொடுக்கும் தோல்விகள் என நிறைய வந்து சென்றுவிட்டன. மேலும் படிக்க