தனது திரைவாழ்வின் 10 ஆண்டுகள் நிறைவை நடிகர் அசோக் செல்வன் ஒரு நெகிழ்ச்சியான குறிப்போடு கொண்டாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 10 ஆண்டுகள் ஒரு மின்னல் போல் கடந்துவிட்டது. நல்ல, கடுமையான விஷயங்கள் பலவற்றை உள்ளடக்கியதாக இருந்தது. சிறு வெற்றிகள், கற்றுக் கொடுக்கும் தோல்விகள் என நிறைய வந்து சென்றுவிட்டன.


ஒன்றுமில்லாதவனாக இருந்து ஒரு அடையாளத்தை உருவாக்கியவனாக இருக்கிறேன். கனவு கொண்டிருந்தன் கலைஞனாகி இருக்கிறேன். ஒரு நம்பிக்கைக்குரிய நடிகனாக இருந்து இன்று அதற்கான அடையாளத்தைப் பெற்ற நடிகனாக இருக்கிறேன். நான் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் வாழ்ந்து வருகிறேன். ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்கிறேன். திரும்பிப் பார்த்தால் எந்த கவலையும் இல்லை. 


என்னை தூக்கிப்பிடித்த ஒவ்வொரு உன்னதமான உள்ளத்திற்கும் நன்றி. கோடானுகோடி நன்றிகள். என்னால் கொடுக்க முடிந்த சிறந்த பங்களிப்பைத் தருவேன் என்று உறுதியளிக்கிறேன். எல்லோரையும் மகிழ்வித்து ஊக்கிவித்து ஒவ்வொரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வேன் என உறுதியளிக்கிறேன். 


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கூடவே அவருடைய முதல் ஃபோட்டோ ஷூட் படங்களையும் பகிர்ந்துள்ளார்.






நான் தொடங்கிய புள்ளியில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டேன். நான் செல்ல வேண்டிய தூரமும் அதிகம். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் நடிகர் அசோக் செல்வன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்.  


உங்களை ஒவ்வொரு முறையும் ஒரு திரைப்படம் மூலம் தொட வேண்டும் என்பதுதான் எனது உந்து சக்தியாக இருக்கிறது. வெவ்வேறு விதமான படங்கள் மூலமாக அதைத் தொடர்ந்து செய்வேன். சில படங்கள் உங்களைத் தொடும். சில படங்கள் உங்களைத் தொடாமல் போகும். ஆனால் நான் அவற்றின் பின்னால் செலுத்தும் எல்லா உழைப்பும் ஒரே மாதிரியானதுதான். 


என் படங்களில் ஏதேனும் ஒன்று உங்களைத் தொட்டிருந்தாலும் கூட அதுபோதும் எனக்கு. உங்களை மகிழ்விப்பதே எனக்கு உண்மையான மகிழ்ச்சி. ஐ லவ் யூ. ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் அன்பும். என் பயணத்தில் துணை நிற்கும் அனைத்து தொழில்நுடப் வல்லுநர்களுக்கும் நன்றி.


தமிழ் திரையுலகின் இளம் கதாநாயகர்களுள் ஒருவரான அசோக் செல்வன் தமிழில் குறிப்பிடத்தக்க சில வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்து வருகிறார்.  இவர் முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படத்தில் இளம் வயது பில்லாவாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.  அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.  இதனை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து பல படங்கள் வரிசை காட்டியது.  பீட்சா-2 வில்லா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார், அதனை தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, 144, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் மொழிப்படங்கள் மட்டுமின்றி இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படத்திலும் நடித்திருக்கிறார்.