- மகாபாரதம் கதையில் சூர்யா.. இந்தியில் நேரடி அறிமுகம்... குஷியில் ரசிகர்கள்..!
நடிகர் சூர்யா மகாபாரதத்தை அடிப்படையாக கொண்ட இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் இப்படம் மகாபாராத கதையில் வரும் கர்ணன் கேரக்டரை மையப்படுத்தி இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாகும் என கூறப்படுகிறது. இந்த படம் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ராவின் கனவுத் திட்டம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- ஜூன் 14ல் கலக்கலாக வெளியாகும் ‘மாவீரன்’ படத்தின் இரண்டாம் பாடல்.. பாடியது யார் தெரியுமா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இரண்டாம் பாடல் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இப்பாடலை சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். மேலும் படிக்க
- இசையமைப்பாளராகும் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா..
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பூவரசம் பீப்பீ, ஏலே, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ஹலீதா ஷமீம் அடுத்ததாக மின்மினி என்னும் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் தான் கதீஜா அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து கதீஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. மேலும் படிக்க
- காயத்தில் இருந்து மீண்டு வந்த விக்ரம்.. மீண்டும் தொடங்கும் தங்கலான் படப்பிடிப்பு..
நடிகர் விக்ரம் காயம் அடைந்ததால் நிறுத்தப்பட்ட தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். விக்ரம் காயமடைந்ததால் கடந்த ஒரு மாதமாகவே ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் படிக்க
- போர்தொழில் படத்தின் வெற்றியால் ராட்சசன் படக்குழு எடுத்த முடிவு..!
நடிகர் விஷ்ணு விஷாலின் 21வது படத்தை ராட்சசன் படத்தின் இயக்குநர் ராம்குமார் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விக்னேஷ் ராஜா இயக்கிய ‘போர் தொழில் படம்’ வெளியானது. அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. ராட்சசன் படத்திற்கு அடுத்ததாக தமிழின் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விஷ்ணு விஷால் படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படிக்க