பிரம்மாண்டமாக தயாராகும் ‘25வது படம்’.. ஜெயம் ரவி ஜோடியாக 3 ஹீரோயின்கள்: ரசிகர்களுக்கு அசத்தல் அறிவிப்பு..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள ஜெயம் ரவி நடிக்கும் 25வது படத்திற்கு ‘ஜீனி’ என பெயரிடப்பட்டுள்ளது.  ஜெயம் ரவி படம் என்றாலே குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கலாம் என்னும் அளவுக்கு பேமிலி ஆடியன்ஸை அதிகம் பெற்ற நடிகர்களில் ஒருவராகவும் அவர் திகழ்கிறார். இப்படியான நிலையில் கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியாகி இருந்தது. இதில் ராஜராஜ சோழன் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். மேலும் படிக்க


வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்த சமந்தா? சினிமாவில் இருந்து மீண்டும் ப்ரேக்? - இதுதான் காரணமா?


நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் இருந்து ஒரு வருடம் சமந்தா பிரேக் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய படங்களில் ஒப்பந்தமாக மாட்டார் என்றும் இந்த நாட்களில் அவர் தனது உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும் சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க


விஜய், அஜித்துக்கு ஒரு நியாயம்.. உதயநிதிக்கு ஒரு நியாயமா? - மாமன்னன் படத்தை விமர்சிக்கும் இணையவாசிகள்!


மாமன்னன் படம் பார்த்த பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், அதில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான காட்சிகள் இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது.  பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 29 ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம்  தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில்  என பலரும் நடித்திருந்தனர். மேலும் படிக்க


எச்.வினோத் மூலம் தேர்தல் வியூகம் வகுக்கும் கமல்..! மக்கள் மத்தியில் எடுபடுமா?


இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமும், பன்முக திறனும் கொண்டவர் கமல்ஹாசன். உலகநாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கமல்ஹாசனின் விக்ரம் படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, அவர் மீண்டும் கோலிவுட்டில் தனது முழு ஈடுபாட்டுடன் களமிறங்கியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படிக்க


வெளியானது அல்போன்ஸ் புத்திரனின் அடுத்தபட அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!


இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கு ‘கிஃப்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது.  மலையாள திரையுலகில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன். பல குறும்படங்களை இயக்கிய அவர், 2013 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். மேலும் படிக்க


சத்தமில்லாமல் நடந்த தனுஷ் பட பூஜை... D50 படத்தின் தலைப்பு இதுதானா? பரபரக்கும் கோலிவுட்!


நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள டி50 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் தற்போது தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில்,  தனுஷ் அடுத்ததாக நடித்து இயக்கும் டி50 படம் குறித்த அப்டேட்கள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பகிரப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க