விழுப்புரம்: மரக்காணம் அருகே அனுமந்தை குப்பத்தில் கடலில் நிருத்தி வைக்கபட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பைபர் படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள அனுமந்தை குப்பம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான பைபர் படகு மூலம் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு திரும்பி வந்து, தன் பைபர் படகை கடலில் நங்கூரம் மூலம் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் அந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள பைபர் படகு மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த ஊர் பொதுமக்கள் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியாமல் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. 


மேலும் இதுகுறித்து போலீசார் யாரேனும் தீயிட்டுக் கொளுத்தினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீ பற்றி எரிந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மரக்காணம் பகுதியில் துறைமுகம் இல்லாத காரணத்தால் நடுக்கடலில் நிறுத்தி வைக்கவேண்டிய நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக மரக்காணம் துறைமுகம் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என்றும், விசைபடகை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களை கண்டுபிடிக்கவேண்டும் என  கோரிக்கையை வைத்துள்ளனர். 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண