‘பார்க்கிங்’ இயக்குநருக்கு தங்க வளையம் அளித்த ஹரிஷ் கல்யாண்.. வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழு!


ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. மேலும் படிக்க


சூர்யா - கௌதம் மேனன் ரசிகர்கள் ஸ்வீட் எடுங்க.. மீண்டும் திரைக்கு வரும் ‘வாரணம் ஆயிரம்’!


சூர்யா நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். கெளதம் மேனன் இப்படத்தை இயக்கினார். சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில்  நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இப்படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது சென்னை கமலா திரையரங்கம். மேலும் படிக்க


கண்ணு பட்டுருச்சு...சுத்திப்போடுங்க பாலா.. கைவிரல் உடைந்த KPY பாலா.. ஆறுதல் சொல்லும் நெட்டிசன்கள்..


KPY பாலா மிக்ஜாம் புயலுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததால், அவரது கை விரல் உடைந்ததா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான KPY நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் KPY பாலா. அண்மையில் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா செய்த உதவி இணையத்தில் வைரலானது. மேலும் படிக்க


எங்களுக்குள் விவாகரத்தா.. அம்பானி பள்ளி விழாவில் முற்றுப்புள்ளி வைத்த அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்!


பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றி வருகிறது என பாலிவுட் வட்டாரங்கள் கடந்த சில நாள்களாக தகவல் தெரிவித்து வருகின்றன அவர்களின் பிரிவு குறித்து சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் படிக்க


குடும்பத்தினரால் தாக்கப்பட்ட சிஐடி நடிகை... காயங்களுடன் வைஷ்ணவி தன்ராஜ் வெளியிட்ட வீடியோ  


கிரைம் டிராமா ஷோ சிஐடியில் இன்ஸ்பெக்டர் தாஷா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி தன்ராஜ். அதை தவிர தேரே இஷ்க் மே கயல் மற்றும் பெப்பன்னா போன்ற பல பிரபலமான நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு பகுதியாக இருந்துள்ளார். அதுமட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் படிக்க


என்னோட பொழப்பே மாறிப்போச்சு... டாக்டராக வேண்டியவன் நான்... மனம் திறந்த ஆனந்த் பாபு  


காலங்களை கடந்த மகா கலைஞன் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு 80ஸ் காலகட்டத்தில் ஒரு பிரபலமான நடிகராக திகழ்ந்தவர். நடிகர் பிரபுதேவாவுக்கு முன்னர் தமிழ் சினிமாவை தனது நடனத்தால் ஆட்டிப்படைத்தவர் அவர்தான். சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகர் ஆனந்த் பாபு தற்போது சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.  ஆனந்த் பாபு திரையுலகிற்குள் வந்த கதை குறித்து அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து இருந்தார். மேலும் படிக்க


என்னுடைய உணர்ச்சிகளை வார்த்தையால் சொல்லமுடியவில்லை... 'சண்டக்கோழி' குறித்து விஷால் நெகிழ்ச்சி  


காதலும் ஆக்ஷனும் கலந்த ஒரு சூப்பர் ஹிட் படமாக 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'சண்டைக்கோழி'. லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.  இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் விஷாலுக்கு ஒரு சிக்னேச்சர் படமாக அமைந்த திரைப்படம் 'சண்டைக்கோழி'. இன்று வரையில் திரை ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாக பதிந்துள்ளதுதான் இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மேலும் படிக்க