‘அள்ளிக் கொடுத்த அன்னப்பூரணி’ - நயன்தாரா படத்தின் இரண்டாவது நாள் வசூல் இவ்வளவா?


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.  அவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். அவருக்கு பாலிவுட்டிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்,  ரன்வீர் சிங்குடன் அவர் நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலமும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலமும் அவர் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் என்றால் அது மிகை ஆகாது. மேலும் படிக்க


நெக்ஸ்ட் விஜய் இல்லை.. அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் நெல்சன்.. ஆச்சரியத்தில் கோலிவுட்


கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாரை வைத்து கலக்கிய நெல்சன் அடுத்ததாக டோலிவுட்டில் அல்லு அர்ஜூன் உடன் கூட்டணி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான நெல்சன், நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறியப்பட்டார். நயன்தாராவை அமைதியான பெண்ணாக காட்டி போதைப்பொருள் கடத்தும் கும்பலை அழிக்கும் நெல்சனின் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். மேலும் படிக்க


'எதிலும் ஒரு வரைமுறை வேண்டாமா?' - நடிகர் விஷாலின் ரத்னம் பட போஸ்டருக்கு காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு


இயக்குநர் ஹரியின் “ரத்னம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியலினத்துறை தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார் தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் பதிவு செய்துள்ளார்.  தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்குவதில் வல்லவர் ஹரி. இவர் விஷாலை வைத்து முன்னதாக தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். மேலும் படிக்க


வெயிட்டான கம்பேக் கொடுத்த ரன்பீர் கபூர்.. பட்டையைக் கிளப்பும் 'அனிமல்' படத்தின் வசூல்!


இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.  தந்தை மகனுக்கு இடையிலான உறவுச் சிக்கலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. மேலும் படிக்க


ரீ-ரிலீஸ் ஆகும் முத்து.. முதன்முறையாக தியேட்டரில் தன் படத்தை பார்க்கப் போகும் கே.எஸ்.ரவிக்குமார்!


சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: “தமிழில் முத்து (Muthu) திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிறது. இங்கு வெளியான மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜப்பானில் வெளியானது. ஜப்பானில் முத்து திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆவதையொட்டி, ஜப்பானில் முத்து திரைப்படத்தை மீண்டும் திரையிடப் போகின்றார்கள். இதற்கான ஜப்பானிய நண்பர்கள் எல்லாம் வந்திருக்கின்றார்கள். அது இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேலும் படிக்க


சமூகத்தால் அலைக்கழிக்கப்படும் 4 பெண்கள்.. வரவேற்பைப் பெறும் 'கண்ணகி' படத்தின் ட்ரெய்லர்!


அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கண்ணகி. யஹ்வந்த் கிஷோர் இந்தப் படத்தை இயக்கியுள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவும் படத்தொகுப்பை சரத்குமார் கையாண்டுள்ளார். மேலும் படிக்க