அனிமல்


இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியானது. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். 


தந்தை மகனுக்கு இடையிலான உறவுச் சிக்கலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு அதிகம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மறுபக்கம் அர்ஜூன் ரெட்டி படத்தைப் போல் அனிமல் படமும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் அனிமல் படத்தின் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது.


முதல் நாள் வசூல்






தமிழ், இந்தி, மலையாளம் ,கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான அனிமல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி மட்டுமே ரூ.116 கோடி வசூல் செய்ததாக படக்குழு தகவல் வெளியிட்டது. எந்த விடுமுறையும் இல்லாதம் போதும் முதல் நாள் இவ்வளவுப் பெரிய வசூல் ஈட்டி அனிமல் படம் சாதனைப் படைத்துள்ளது. 


இரண்டாவது வசூல்






இதனைத் தொடர்ந்து தற்போது அனிமல் படத்தின் இரண்டாவது நாள் வசூல் தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை நாளைத் தொடர்ந்து முதல் நாளுக்கு நிகரான வசூலை ஈட்டிய அனிமல் படம், இரண்டு நாட்களில் ரூ.236 கோடிகளை வசூலித்துள்ளது. இனி வரும் வாரங்களில் இந்த வசூல் தொடரும் என்றும், இந்த ஆண்டு அதிகம் வசூல் ஈட்டியப் படங்களில் அனிமல் திரைப்படம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க :  Animal Movie Review : ஒற்றை ஆளாக படத்தை தூக்கி நிறுத்தும் ரன்பீர்... ராஷ்மிகா - ரன்பீர் காம்போவில் அனிமல் எப்படி இருக்கு?


Vijay Devarakonda - Rashmika: ஒரே கலர் ஹூடியில் மும்பையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா உலா!