சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது: “தமிழில் முத்து (Muthu) திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிறது. இங்கு வெளியான மூன்று வருடங்களுக்குப் பிறகு ஜப்பானில் வெளியானது. ஜப்பானில் முத்து திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் ஆவதையொட்டி, ஜப்பானில் முத்து திரைப்படத்தை மீண்டும் திரையிடப் போகின்றார்கள்.


இதற்கான ஜப்பானிய நண்பர்கள் எல்லாம் வந்திருக்கின்றார்கள். அது இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஒரு நாடு விட்டு நாடு, அதாவது ‘பேன் இந்தியா’னு சொல்லுவாங்க இல்ல இது பேன் வோர்ல்ட் அன்னைக்கே. ஜப்பான்ல டான்சிங் மகாராஜா (முத்து) 100 நாட்கள் ஓடி இருக்கு. அதுக்கு அவங்க சந்தோஷமாக கொண்டாடணும்னு நெனச்சி வந்தது ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. 


முத்து எனக்கு அமைஞ்சது இறைவன் அருள் தான். ஏன்னா, நாட்டாமை படம் பார்க்க வந்த ரஜினி சார் என்னை டைட்டா கட்டிப் பிடிச்சி பாராட்டுனாரு. இப்படி ஒரு படம் நம்ம பண்ணனும்னு சொன்னாரு. அந்தப் படம் தான் முத்துனு அப்போ எனக்கு தெரியாது. அதுக்கப்புறம் பாட்ஷா ப்ரிவியூவ் ஷோவுக்கு ரஜினி என்னை கூப்பிட்டிருந்தார். ஓப்பனா பேசினேன் அந்தப் படத்த பத்தி.


நான் பெரிய குடும்பம் படம் ஷூட்டிங்ல இருக்கும்போது நம்ம ஒரு படம் பண்ணலாமானு கேட்டாரு. ஓகே சார் பண்ணலாம்னு சொன்னே. அந்தப் படத்தை விட, கூட இன்னொரு சந்தோஷம் என்னனா, டைரக்டர்ஸ்ல மிகப்பெரிய டைரக்டர் யாருனா மூன்று தெய்வங்கள் மாதிரி, ஸ்ரீதர் சார், பாலச்சந்தர் சார், பாரதிராஜா சார்.


பாலச்சந்தர் சார் மேல ரொம்ப ஒரு அலாதியான ஒரு பிரியம். அவரோட டைரக்‌ஷன் மேல, படத்தின் மேல. படைப்பாளி சங்கத்துல நாங்கலாம் ரொம்ப ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோம்.  அவரைப் பார்க்கும்போது அவரோட பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு நாள் எனக்கு போன் பண்ணாரு, ”யோவ் நான் ஒரு படம் பார்த்தேன்.. அதுல நீ நடிக்குற.. நல்லாதான்யா நடிக்குற. நாளைக்கு ஒரு சீன் இருக்கு வந்து பண்றியா” அப்டினு கேட்டார்.


கல்கினு ஒரு படத்துல ஒரே ஒரு சீனுக்கு கூப்பிட்டாரு. பயங்கர சந்தோஷம். தன்னுடைய தயாரிப்பில் என்னை போட்டது சந்தோஷம் அப்போவே.  படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இருந்தா நல்லா இருக்கும் சார்னு சொன்னேன். உடனே ஃபோன் பண்ணி ஈவினிங் வர சொல்லி இருக்கேன், போய் பார்த்துடுனு சொன்னாரு. நானும், ரஜினி சாரும் போய் கதை சொன்னோம். ஓகே சொல்லிட்டாரு. நானும் ரஹ்மானும் ஃபர்ஸ்ட் காம்பினேஷன். 


சோ இப்படி எல்லாமே அமைஞ்சதுனுதான் சொல்லுவேன் அந்தப் படத்துல. அது இவ்ளோ பெரிய ஹிட் ஆனது ரொம்ப சந்தோஷம். என்னோட நிறைய படம் ஹிட் ஆயிருக்கு. அன்னைக்கு ஒரு நாள் கமல் சார் ஃபோன் பண்ணி, தசாவதாரம் முடிஞ்சி 12 வருஷம் ஆச்சு, எவ்ளோ பெரிய பிரச்னை வந்தது. எப்டிலாம் சமாளிச்சோம்னு எனக்கு நியாபகம் வந்தது, அதான் ஃபோன் பண்ணேன்னு சொன்னாரு. 


முத்து வெளியாகி 28 வருஷம் ஆவதை ஒட்டி இந்த 8ஆம் தேதி முத்து திரைப்படத்தை மீண்டும் தியேட்டர்களில் திரையிடறாங்க. முதன்முதலா நான் டைரக்ட் பண்ண படத்தை நான் தியேட்டர்ல போய் பார்க்க போறேன். நான் என்னோட படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதில்லை. ஏன்னா நான் அசிஸ்டண்ட் டைரக்டராக வேலை பார்க்கும் போது என் இயக்குனர் கூட தியேட்டருக்கு போயிருந்தேன். என்னோட இயக்குனர, தியேட்டருல ஆடியன்ஸ் திட்டினதால, ஒருத்தர அடிச்சி ரொம்ப ரகளையா ஆயிடுச்சி. டைரக்டர திட்டினதுக்கே அடிக்க போய்ட்டோம் சரி வேண்டாம் அப்டினு முதல்ல ஒரு நாளஞ்சி படம் பார்க்கம இருந்தேன். அப்றம் படம் ஹிட் ஆன உடனே அதையே செண்டிமெண்ட் ஆக்கிட்டேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.