• சுதந்திர தின விடுமுறையைக் குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படத்தின் ரிலீஸ் எப்போது?




சன் பிச்சர்ஸ் தயாரிப்பில்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் “ஜெயிலர்”. இந்த படத்தில்  மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப், தமன்னா,  ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க



  • மோகன்லால் முதல் விக்ரம் வரை.. உச்ச நட்சத்திரங்களுடன் நடித்த பிரபல நடிகர் காலமானார்


மலையாள சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் என பிரபல நடிகராக வலம் வந்த நடிகர் மம்முக்கோயா இதுவரை 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் மல்லப்புரத்தின் வண்டூர் பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டிக்கு தலைமை தாங்கச் சென்றிருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். மேலும் படிக்க




  • மிரட்டலாக ரிலீசானது ஃப்ளாஷ் ட்ரெய்லர்..! இனிதான் டி.சி.யோட ஆட்டம் ஆரம்பம்..!




பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஆண்டி முஷெட்டி இயக்கத்தில் எஸ்ரா மில்லர் நடிப்பில் உருவாகியுள்ள தி ஃப்ளாஷ் திரைப்படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு ஃப்ளாஷ் கதாபாத்திரங்களுடன் மைக்கல் கீட்டன் மற்றும் பென் அஃப்லெக் ஆகியோர் பேட் மேனாக நடிக்க, சூப்பர் கேர்ள் கதாபாத்திரமும் இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க



  • ஜூனியர் என்.டி.ஆரை. நடிக்க வைக்க ஆசைப்படும் டி.சி...! ஹாலிவுட்டிற்கு போகிறாரா..?


ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படம் மூலம் உலகப்புகழ் பெற்றுள்ள ஜுனியர் என்.டி.ஆர் உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக, டி.சி. சினிமாடிக் யூனிவெர்ஸின் தலைவர் ஜேம்ஸ் கன் தெரிவித்துள்ளார். அவருக்கான கதாபாத்திரத்தை நான் தேட வேண்டும். அதற்கு சில காலம் ஆகும்” எனவும் ஜேம்ஸ் கன் கூறியுள்ளார். இதனிடையே மார்வெலுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்ட நிறுவனம் டிசி. அந்த நிறுவனத்தின் சினிமாடிக் யூனிவெர்ஸின் தலைவராக ஜேம்ஸ் கன் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க



  • போதையில் தள்ளாடும் பிரபல மலையாள நடிகர்கள்.. நடிக்க தடை விதித்த திரையுலக சங்கங்கள்..! ரசிகர்கள் அதிர்ச்சி


நடிகர்கள் ஸ்ரீநாத் பாசி, ஷேன் நிகாம் ஆகியோருக்கு மலையாள திரைப்பட உலகம் தடை விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா), தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும், போதைக்கு அடிமையான கலைஞர்களுக்கு சங்கம் ஒருபோதும் ஒத்துழைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க