காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 2018 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஜி.கே.மணி உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள என் 1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆஜரானார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, “கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் எங்கள் மீது போட்ட வழக்கிற்கு ஆஜராகி உள்ளோம். இந்த வழக்கானது உண்மைக்கு மாறாக காவல்துறையினர் உணரப்பட்ட வழக்கு. இந்த வழக்கு உண்மைக்கு புறம்பாக போடப்பட்ட வழக்கு என்பதால் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. 12 மணி நேர தொழிலாளர் சட்டம் கொண்டு வந்ததை சட்டமன்றத்தில் கடுமையாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எதிர்த்தோம். இந்த சட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தோம். எனவே இந்த சட்டத்தை நிறைவேற்றி இருந்தாலும் மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இருப்பினும் தமிழக அரசு சட்டசபையில் இந்த சட்டத்தை நிறைவேற்றியது. இந்த செயல் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரை வேதனைக்கு உள்ளாக்கியது. இப்போது சட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர் அது மகிழ்ச்சி அளிக்கிறது. 40 ஆண்டு காலமாக மருத்துவர் மதுக்கூடங்கள் திருமண மண்டபங்கள் என அனைத்து இடத்தில் அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறார். இந்த ஆண்டு அரசாணையில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை.



வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது சமூகநீதியில் மிக மிக முக்கியமானது. 1989 காலகட்டத்தில் அதற்கு முன்பாக 50 சதவீதம் பிற்படுத்தப்பட்டோர் என்று இருந்தது. பிற்படுத்தப்பட்டவர்கள் 30 விழுக்காடு மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தமிழக அரசு அன்று அறிவித்தது. இதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ் போராட்டம் மற்றும் 21 பேரின் உயிர் தியாகம் தான். ஆனால் இப்போது மீண்டும் தமிழக அரசு காலம் தாழ்த்துவது மிகவும் வருத்தத்தை ஏற்படுகிறது . இதற்கு சட்டசபையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தினோம் ஆனால் அவை அனைத்தையும் செய்தி குறிப்பில் இருந்தும், அவை குறிப்பில் இருந்தும் நீக்கி விட்டார்கள். சபாநாயகர் அவை குறிப்பில் இருந்து அனைத்தையும் நீக்கி விடுவோம் என கூறினார். அதைக் குறிப்பில் இருந்து நீக்கினால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை ஆனால் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். நிலக்கரியில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு தேவையில்லை. காற்றாலை மின் உற்பத்தி, எரிபொருள் மின்னு உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி, அனல் மின் உற்பத்தி தான் தேவை. நிலம், நீர், காற்று மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் மின் உற்பத்தியை தமிழக அரசு குறைத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.