• 5 மாநில சட்டமன்ற தேர்தல்; விழிப்புணர்வு தூதராக பிரபல பாலிவுட் நடிகர் நியமனம்


அண்மையில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நவ. 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், மத்திய பிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், மிசோரத்தில் நவ.7ம் தேதியும், ராஜஸ்தானில் நவ.23ம் தேதியும், தெலங்கானாவில் நவ.30ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் படிக்க



  • Big Boss Vijay Varma: ’பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவேன் என நினைக்கவில்லை’ - விஜய் வர்மா வருத்தம்


விஜய் டிவியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் சீசன் 7ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக விஜய் வர்மா பங்கேற்றிருந்தார். போட்டியின் முதல்வாரத்தில் கேப்டனாக இருந்த விஜய் வர்மா அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினார். பிக்பாஸ் போட்டியாளர்களை மிட்டல் விடுக்கும் விதமாக பேசியது, பிரதீப் ஆண்டனியை தாக்கியது, விஷ்ணுவிடம் சண்டைக்கு போனது என விஜய் வர்மாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் கடந்த வார எவிக்‌ஷனில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது நபராக விஜய் வர்மா வெளியேறினார். மேலும் படிக்க



  • Jailer actor Vinayakan: போலீசிடமே போதையில் ரகளை; ஜெயிலர் வில்லன் விநாயகனுக்கு ஜாமின்


தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த விநாயகன் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார், நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்த ஜெயிலர் படத்தில் விநாயகன், வர்மன் என்ற கேரக்டரில் மிரட்டலான வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். தனது பேச்சு, வில்லத்தனம் என அனைத்தையும் ரசிக்க வைத்த விநாயகன், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் படிக்க



  • Tharunam Movie: ”விரைவில் திரையில்”.. டப்பிங் பணி புகைப்படங்களை பகிர்ந்த “தருணம்” படக்குழு..!


தேஜாவு படத்தின் மூலம்  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் தருணம் என்படதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.  முழுக்க முழுக்க ரொமான்டிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் தருணம் படத்தில் ’முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், நடிகையான ஸ்மிருதி வெங்கட் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் படிக்க



  • Leo Arjun: ஆக்‌ஷன் கிங் பட்டத்தை ஸ்கிப் செய்த லியோ டீம் - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி ரிலீசாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்ததால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.  படத்தின் அதிகாலை காட்சிக்கு தடை விதிக்கப்பட்டு காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. உலகம் முழுவதும் லியோ படம் ரிலீசான நிலையில் முதல் நாளில் மட்டும் ரூ. 148 கோடி வசூலான படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது. மேலும் படிக்க