ஐந்து மாநிலங்களின் தேர்தல் ஆணைய விளம்பர தூதராக பிரபல இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். 


5 மாநில தேர்தல்:


அண்மையில் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு நவ. 7ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், மத்திய பிரதேசத்திற்கு நவம்பர் 17ம் தேதியும், மிசோரத்தில் நவ.7ம் தேதியும், ராஜஸ்தானில் நவ.23ம் தேதியும், தெலுங்கானாவில் நவ.30ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. 


பாலிவுட் நடிகர் விளம்பர தூதர்:


இந்த நிலையில் ஐந்து மாநிலங்களின் தேர்தலை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்களிப்பதை ஊக்குவிக்கவும் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் தேர்தல் ஆணைய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரமுகர்களை தேர்தல் ஆணையம் நியமிப்பது வழக்கம். அந்த வகையில், தேசிய அளவிலான தேர்தல்களில் தேர்தல் விழிப்புணர்வு சின்னங்களாக கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, நடிகர் அமீர்கான், பாடகர் ஜச்பீர் ஜசி நியமிக்கப்பட்டனர். 


புரிந்துணர்வு ஒப்பந்தம்:


கடந்த ஆகஸ்ட் மாதம் சச்சின் டெண்டுல்கர் தேர்தல் ஆணைய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டில் நிழல்கள் ரவி, ரோபோ சங்கர், பாடகி சித்ரா உள்ளிட்டோரும் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த வரிசையில் தேர்தல் ஆணையத்தில் விளம்பர தூதராக ராஜ்குமார் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் முன்னிலையில் கையெழுத்தானது. 






தற்போது தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக இருக்கும் ராஜ்குமார் ராவ், 2017ம் ஆண்டு வெளிவந்த நியூட்டன் படத்தில் தேர்தல் அலுவலராக நடித்திருந்தார். 


மேலும் படிக்க: HBD Sivakumar : தன்னிகரில்லா கலைஞன்... மனம் கவர்ந்த மார்க்கண்டேயன் சிவகுமாரின் 82வது பிறந்தநாள்!


Today Movies in TV, October 27: சூப்பரான படங்களை மிஸ் பண்ணாதீங்க.. டிவியில் இன்றைய ஸ்பெஷல் என்ன தெரியுமா?