Jailer actor Vinayakan: மதுபோதையில் ரகளை செய்த புகாரில் கைதான ஜெயிலர் பட நடிகர் விநாயகன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


ஜெயிலர் வில்லன்:


தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த விநாயகன் அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார், நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் திரைக்கு வந்த ஜெயிலர் படத்தில் விநாயகன், வர்மன் என்ற கேரக்டரில் மிரட்டலான வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். தனது பேச்சு, வில்லத்தனம் என அனைத்தையும் ரசிக்க வைத்த விநாயகன், ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். 


நடிப்பு மட்டும் இன்றி, பாடகர், இசை, நடனம், சண்டை என ஆல்ரவுண்டராக வலம் வந்த விநாயகன், மலையாளத்தில் வெளிவந்த கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். ஜெயிலர் படத்தின் வரவேற்பை தொடர்ந்து விநாயகனுக்கு பட வாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளன. 


விநாயகனுக்கு ஜாமின்:


இந்த சூழலில் கடந்த செவ்வாய்கிழமை எர்ணாகுளம் போலீசாரால் விநாயகன் கைது செய்யப்பட்டார். அவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மது அருந்தி விட்டு பிரச்சனை செய்வதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி சம்மன் அனுப்பப்பட்டு காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்த விநாயகன், மதுபோதையில் இருந்ததாகவும், போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.


இதனால், விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பினர்.  போலீசாரை பணி செய்ய விடாமல் தடுப்பதாக கூறி விநாயகன் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தவர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய விநாயகன், தன்னை எதற்கு கைது செய்தனர் என்று தெரியவில்லை என்றார் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க:  15 Years of Seval: கம்பேக் கொடுத்த சிம்ரன்.. ஹீரோயினான பூனம் பாஜ்வா.. “சேவல்” படம் ரிலீசாகி 15 வருஷமாச்சு..!


HBD Sivakumar : தன்னிகரில்லா கலைஞன்... மனம் கவர்ந்த மார்க்கண்டேயன் சிவகுமாரின் 82வது பிறந்தநாள்!