Leo Arjun: விஜய் நடித்த லியோ படத்தில் அர்ஜூன் பெயருக்கு முன்னால் ஆக்‌ஷன் கிங் என்ற அடைமொழி பெயர் போடவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. 


லியோ:


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் கடந்த 19ம் தேதி ரிலீசாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்ததால் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. 


படத்தின் அதிகாலை காட்சிக்கு தடை விதிக்கப்பட்டு காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. உலகம் முழுவதும் லியோ படம் ரிலீசான நிலையில் முதல் நாளில் மட்டும் ரூ. 148 கோடி வசூலான படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்திருந்தது. லியோ படத்தின் 7வது நாளாக லியோவின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் ரூ263.5 கோடி என கூறப்படுகிறது. 


ஆக்‌ஷன் கிங் மிஸ்:


இதற்கிடையே, லியோ படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜூனின் பெயரை படக்குழு மாற்றியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறது. ஆக்‌ஷன்களில் அசத்தும் அர்ஜூன் படங்களில் அவரது பெயருக்கு முன்னதாக ஆக்‌ஷன் கிங் என்ற அடைமொழி பெயர் இடம்பெற்றிருக்கும். ஆனால், லியோ படத்தில் அர்ஜூன் பெயருக்கு முன்னால் ஆக்‌ஷன் கிங் என்ற பெயர் இடம்பெறவில்லை. லியோவின் முக்கியமான வில்லனான சஞ்சய் தத்திற்கு தம்பியாகவும், விஜய்க்கு சித்தப்பாகவும் நடித்திருக்கும் அர்ஜூன், சண்டை காட்சிகளில் மிரட்டி  இருக்கும் நிலையில் அவர் பெயருக்கு முன் ஏன் ஆக்‌ஷன் கிங் என்று பெயரிடவில்லை என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.



 


மேலும் படிக்க:  Suriya 43: சூர்யா நடிக்கும் ‘புறநானூறு’.. இணைந்த துல்கர், நஸ்ரியா.. வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!


Amala Paul: பிறந்தநாளில் லவ் ப்ரபோஸ்..காதலரை அறிமுகம் செய்த அமலா பால்.. வைரலாகும் வீடியோ..!