Tharunam Movie: ”விரைவில் திரையில்”.. டப்பிங் பணி புகைப்படங்களை பகிர்ந்த “தருணம்” படக்குழு..!

முழுக்க முழுக்க ரொமான்டிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் தருணம் படத்தில் ’முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார்.

Continues below advertisement

இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் தருணம் திரைப்படம் இறுதிக்கபட்ட பணிகளில் இருப்பதால், விரைவில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Continues below advertisement

தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் இணைந்து நடிக்கும் "தருணம்"  படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் முடிந்தன.

‘தேஜாவு’ படத்தின் மூலம்  ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இரண்டாவதாக இயக்கி இருக்கும் படம் தருணம் என்படதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.  முழுக்க முழுக்க ரொமான்டிக் திரைப்படமாக உருவாகி இருக்கும் தருணம் படத்தில் ’முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன் தாஸ் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும், நடிகையான ஸ்மிருதி வெங்கட் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 

தற்போது "தருணம்" திரைப்படத்தின் டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இப்படத்தின் படிப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. 

புகழ் மற்றும் ஈடன் (ஸென் ஸ்டுடியோஸ்) நிறுவனம் தயாரித்துள்ள தருணம் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணியில் அருள் இ சித்தார்த் இணைந்துள்ளார். 

மேலும் படிக்க: Jailer actor Vinayakan: போலீசிடமே போதையில் ரகளை; ஜெயிலர் வில்லன் விநாயகனுக்கு ஜாமின்

Label Series: ஜெய் நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் ‘லேபிள்’ சீரிஸ்.. இந்த பேருக்கு இப்படி ஒரு அர்த்தமா?

 

Continues below advertisement