“இது டைகரோட தீபாவளி, எப்படி அதிருதுன்னு பாரு” சல்மான் கானின் டைகர் 3 ட்ரெயிலர் ரிலீஸ்!


'இது டைகரோட தீபாவளி எப்படி அதிருதுன்னு பாரு' உள்ளிட்ட பஞ்ச் வசனங்களுடன் வெளியாகியுள்ளது சல்மான்கான் நடித்த டைகர் 3 படத்தின் டிரெய்லர்.  2012ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் ‘ஏக் தா டைகர்’ படம் ரிலீசானது. அதை தொடர்ந்து 2ம் பாகம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாம் தீபாவளி சரவெடியாக திரைக்கு வர உள்ளது. மேலும் படிக்க


“மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை வேண்டுகிறேன்” - லியோ குறித்து நடிகர் ரஜினிகாந்த் திடீர் பேட்டி!


‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பை கன்னியாகுமரியில் முடித்துக்கொண்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் ரஜனிகாந்த் பேட்டியளித்துள்ளார்.  “‘புவனா ஒரு கேள்விகுறி’ படத்துக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்புக்காக 1977ஆம் ஆண்டு வந்தேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை. மேலும் படிக்க


முரட்டு வில்லனாக மிரட்டும் பிருத்விராஜ்.. போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய ‘சலார்’ படக்குழு!


‘சலார்’. கேஜிஎஃப் பாகங்களை இயக்கி கன்னட சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரஷாந்த் நீல். கன்னட சினிமாவின் மார்க்கெட்டையே அடுத்த தளத்துக்கு உயர்த்திய பிரஷாந்த் நீலின் அடுத்த படமான சலாரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். கேஜிஎஃப் பாகங்களைத் தொடர்ந்து மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. மேலும் படிக்க


24 காரட் தங்க ஐஃபோனை காணவில்லை.. மோடி மைதானத்தில் தொலைத்த 'லெஜெண்ட்' பட நடிகை!


இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருவபர் ஊர்வசி ரவுடேலா. தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் மிகவும் பிரபலமானவர். மிகவும் பிரபலமான தொழில் அதிபரான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஹீரோவாக நடித்த திரைப்படம் "லெஜெண்ட்". இப்படத்தில் அவரின் கதாநாயகியாக நடித்தவர் தான் ஊர்வசி ரவுடேலா. இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். மேலும் படிக்க


நீதிமன்றத்தை நாடிய விஜய்யின் ‘லியோ’ படக்குழு.. முன்கூட்டியே திரையிட அனுமதி கிடைக்குமா?


லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி ரசிகர் காட்சிக்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில்  தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படிக்க


”எனக்கு தமிழ் சினிமா நடிகர்கள் மேல் நம்பிக்கையே கிடையாது” .. இயக்குநர் அமீர் பேச்சால் சலசலப்பு..!


எனக்கு எப்பவுமே தமிழ் சினிமா நடிகர்கள் மேல் எந்த நம்பிக்கையும் கிடையாது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருந்த “சித்தா” படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கான ப்ரோமோஷன் நடைபெற்ற சமயத்தில் தமிழ்நாடு - கர்நாடகா அரசுகள் இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தது. மேலும் படிக்க