தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தலைவர் 170 படப்பிடிப்பு


‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பை கன்னியாகுமரியில் முடித்துக்கொண்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் ரஜனிகாந்த் பேட்டியளித்துள்ளார்.  “‘புவனா ஒரு கேள்விகுறி’ படத்துக்குப் பிறகு தென் மாவட்டத்தில் படப்பிடிப்புக்காக 1977ஆம் ஆண்டு வந்தேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள் எனக்கு ஒரு வருத்தம் என்னவென்றால் எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை.


நடிகர் விஜய் நடித்து வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். லியோ திரைப்படம் வெளியாக இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த கோலிவுட்டும் லியோ ஃபீவரில் ஆழ்ந்துள்ளது. மற்றொருபுறம் லியோ படத்தின் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி கோரி படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளது.


லியோ சிறப்புக்காட்சிக்கு அனுமதி கிடைக்குமா?


லியோ திரைப்படம் வெளியாகும் அக்.19ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதிவரை நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் வரை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியிருந்தது.  மேலும் லியோ சிறப்புக் காட்சி குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதிய உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.


மேலும், சிறப்புக்காட்சி திரையிடலின்போது விதிமீறல்கள் நடந்தால் அதனைக் கண்காணிக்கு சிறப்புக்குழு அமைத்தும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அமுதா ஐஏஎஸ் உத்தரவி பிறப்பித்திருந்தார்.


இந்நிலையில், சிறப்புக்காட்சி தொடர்பாக ரசிகர்கள், படக்குழு என அனைத்து தரப்பினரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், தற்போது படக்குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.


4 நாள்களில் திரையரங்கில் லியோ


விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜூன், மிஸ்கின், சஞ்சய் தத்,  மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ப்ரியா ஆனந்த், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என மிகப்பெரும் பட்டாளமே லியோ படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர், நா ரெடி, Bad Ass, அன்பெனும் ஆயுதமே மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்னும் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாக வேண்டி உள்ளது. 


மேலும் படிக்க: Actor Rahman: செய்தி பார்ப்பது இல்லை.. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பிருக்கு.. பாலிவுட் என்ட்ரி.. மனம் திறந்த நடிகர் ரகுமான்!


Crazy Mohan: சாக்லேட் கிருஷ்ணன், அகண்ட வாசிப்பு, அன்பு நண்பர்.. கிரேஸி மோகன் பிறந்தநாளில் கமல்ஹாசன் பதிவு!