சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் (அக்டோபர் 14) மருமகள்களிடம் இருந்து சமையல் அறை பொறுப்புகள் அனைத்தையும் ஜான்சி ராணியிடம் ஒப்படைக்கிறார் மாமியார் விசாலாட்சி அம்மா.  அதனால் மனம் வருத்தப்பட்ட மருமகள்கள் வீட்டுக்கு வந்த அப்பத்தாவிடம் நியாயம் கேட்கிறார்கள். 

அப்பத்தா  வீட்டுக்கு வந்த முக்கியக் காரணம் அவர் ஒரு பங்க்ஷன் வைத்து இருப்பதாக சொல்லி அதற்கு அவர்களை அழைக்க தான். திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட அதே நாளில் அதே இடத்தில் தான் இந்த பங்க்ஷனையும் அப்பத்தா ஏற்பாடு செய்துள்ளார் என்பதைத் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கப்போவது ஜீவானந்தம் என்பதை தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்கள். "இதைக் கேட்டு கதிர் சந்தோஷப்படுகிறான். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். மரியாதை செய்து அனுப்பி வைக்கலாம்" என நக்கலாக சொல்கிறான் கதிர்.


 



அன்று இரவு ஞானம் மற்றும் கதிர் பேசிக்கொண்டு இருக்கையில் "ஜீவானந்தம் தானாக வந்து வலையில் சிக்கிக் கொண்டான். அவனை இந்த முறை விட்டு விடக்கூடாது.  போட்டுத் தள்ளிவிட வேண்டும்" என சொல்கிறான் கதிர். அந்த நேரத்தில் வக்கீல் போன் செய்து கதிரை போய் வளவனை சென்று சந்திக்க சொல்லி குணசேகரனிடம் இருந்து தகவல் வந்ததாக சொல்கிறார் வக்கீல். ஞானத்துக்கு வளவன் யார் என்று தெரியாததால் குழம்பிப் போய் கதிரிடம் கேட்கிறான். ஆனால் கதிர் எதையோ சொல்லி சமாளித்து விட்டு சென்று விடுகிறான்.  இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை ஈஸ்வரி கவனித்து விடுகிறார்.


அடுத்த நாள் காலை ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்து இதைப் பற்றி சொல்வதற்காக செல்ல, ஜனனியும் சக்தியும் பேங்க் விஷயமாக வெளியில் கிளம்புகிறார்கள். ஜான்சி ராணி அவர்கள் கிளம்பும் போதே அபசகுனமாக பேசுகிறாள். 

ஈஸ்வரி ஜீவானந்தத்தை போய் சந்திக்கிறாள். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது:



 ஜனனி மற்றும் சக்தி அவர்கள் வாங்கப் போகும் பேக்டரி உரிமையாளரைப் போய் சந்திக்க செல்கிறார்கள்.  அங்கு ஏதோ தடங்கலாக நடைபெற, அதைப்பற்றி யோசித்துக் கொண்டு கவலையுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள் அப்போது சக்தி  "தொழில் ஆரம்பிப்பதற்கு முன்பே இத்தனை சிக்கல்கள் தடங்கல்கள் வருகிறது. இது தேவையா" எனக் கேட்கிறான். அதற்கு ஜனனி "அதற்காக விட்டுட்டு போய்விடலாம் என சொல்றியா" எனக் கோபமாக கேட்கிறாள்.


 





ஜீவானந்தமும் ஈஸ்வரியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி "நீங்கள் அங்கு வந்தா தேவையில்லாத பல சிக்கல்கள் வருமோ எனத் தோணுது" என ஜீவானந்ததிடம்  தயங்கி தயங்கி சொல்கிறாள் ஈஸ்வரி.


"உங்க அப்பத்தா கேட்டுக் கொண்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை" என்கிறார் ஜீவானந்தம். "உங்க மனைவி மரணத்துக்கு காரணம் என்னுடைய கணவர் குணசேகரனும் அவருடைய தம்பி கதிரும் தான்" என சொல்கிறாள் ஈஸ்வரி. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ஜீவானந்தம். இதுதான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்.