சலார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிருத்விராஜின் லுக் வெளியாகியுள்ளது.
‘சலார்’. கேஜிஎஃப் பாகங்களை இயக்கி கன்னட சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரஷாந்த் நீல். கன்னட சினிமாவின் மார்க்கெட்டையே அடுத்த தளத்துக்கு உயர்த்திய பிரஷாந்த் நீலின் அடுத்த படமான சலாரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். கேஜிஎஃப் பாகங்களைத் தொடர்ந்து மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.
பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்நிலையில், பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது கதாபாத்திரத்தின் மாஸ் லுக் புகைப்படம் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது.
நெற்றியில் திலகமிட்டு, மூக்கில் செப்டெம் ரிங் (Septum Ring) அணிந்து பிருத்விராஜ் தோன்றும் புகைப்படத்தை அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டராக படக்குழு பகிர்ந்துள்ளது.
நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை அவருக்கு அவர்து ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். நடிகர், இயக்குநர் என மலையாள சினிமாவில் மாஸ் காட்டும் பிருத்விராஜ் சினிமா பின்னணி இல்லாமல் வளர்ந்து மலையாளம் தாண்டி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பங்காற்றிவரும் பிருத்விராஜ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் வில்லனாகவே அறிமுகமானார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கனா கண்டேன் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்ததன் பிறகு தற்போது மீண்டும் ஒரு மாஸ் அவதாரத்தில் பான் இந்தியா படமான சலாரில் தோன்றியுள்ளார்.
வரும் டிசம்பர் 22ஆம் தேதி