இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருவபர் ஊர்வசி ரவுடேலா. தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் மிகவும் பிரபலமானவர். மிகவும் பிரபலமான தொழில் அதிபரான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஹீரோவாக நடித்த திரைப்படம் "லெஜெண்ட்". இப்படத்தில் அவரின் கதாநாயகியாக நடித்தவர் தான் ஊர்வசி ரவுடேலா. இவர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
ரந்தீப் ஹூடா, அமித் சியால், ஃப்ரெடி தருவாலா, அபிமன்யு சிங் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இன்ஸ்பெக்டர் அவினாஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார் ஊர்வசி ரவுடேலா. மே மாதம் முதல் இப்படம் ஜியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.
இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் :
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அக்டோபர் 14ஆம் தேதியன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையே 12-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியைக் காண ஊர்வசி சென்றிருந்தார். இந்த சுவாரஸ்யமான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

துரதிர்ஷ்டவசமான சம்பவம் :
இந்த கிரிக்கெட் போட்டியை நேரில் காண சென்ற நடிகை ஊர்வசி ரவுடேலா தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவே இந்த அட்டகாசமான வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் ஊர்வசி ரவுடேலவுக்கு மட்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு கழிக்க சென்ற இடத்தில் தனது 24 கேரட் தங்க ஐ போனை தொலைத்து விட்டார். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தனது எக்ஸ் தள பக்கம் மூலம் பதிவிட்டு இருந்தார்.
"அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் போனை தொலைத்துவிட்டேன். யாராவது கண்டெடுத்தால் விரைவில் என்னைத் தொடர்பு கொள்ளவும்" என ஒரு குறிப்பை பகிர்ந்து அகமதாபாத் போலீஸையும் அதில் டாக் செய்துள்ளார். இதனால் அகமதாபாத் போலீஸும் அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து:
சோசியல் மீடியாவில் ஊர்வசி ரவுடேலாவின் இந்த போஸ்டை பார்த்த நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். இணையத்தில் இந்த விஷயம் ஒரு பேசுபொருளாக மாறி எக்கச்சக்கமான கமெண்ட்களையும் கிண்டலையும் குவித்து வருகிறது. ஐ போனில் 24 கேரட் தங்க ஃபோன் கூட இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். உங்களின் போன் உபோயோகத்தில் இருந்தால் நிச்சயம் அகமதாபாத் போலீஸ் நிச்சயம் அதை விரைவில் கண்டுபிடித்து தருவார்கள், தங்க ஐஃபோன் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகை... தயவு செய்து அதை அவரிடம் திருப்பி கொடுத்து விடுங்கள்” என சரமாரியாக கமெண்ட்களை வீசி வருகிறார்கள் ரசிகர்கள்.