திருநெல்வேலியில் தலைவர் 170 படப்பிடிப்பு.. ஷூட்டிங் தளத்தில் ரசிகர்களுக்காக ரஜினி செய்த காரியம்!


த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 170 திரைப்படம் உருவாகி  வருகிறது. அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்கள். லைகா புரோடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமூகக் கருத்துள்ள நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக தலைவர் 170 படம் உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது. மேலும் படிக்க


ஓடிடிக்கு டிசிப்ளினா வரும் கேங்ஸ்டர்கள்.. ‘மார்க் ஆண்டனி’ படத்தை எங்கு, எப்போது பார்க்கலாம்?


பல்வேறு சிக்கல்கள் சவால்களை எதிர்கொண்டு கடைசியாக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. த்ரிஷா இல்லனா நயன்தாரா, பகீரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விஷால் , எஸ்.ஜே.சூர்யா, ரித்து0 வர்மா, ஒய்.ஜி மகேந்திரன், செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்து ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். மேலும் படிக்க


தமிழ் திரையுலகில் சோகம்.. பிரபல நடிகர் நாசரின் தந்தை உயிரிழப்பு!


பிரபல நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கோலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான நாசர், தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி பிரபல நடிகர்களுள் ஒருவராக விளங்கி வருகிறார். 1985ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின்  இயக்குநர் இமயமாகக் கொண்டாடப்படும் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் கல்யாண அகதிகள் படத்தில் அறிமுகமானார் நாசர். சிறுவயது முதலே நாசர் நடிகராக வேண்டும் என்பது அவரது தந்தை மெஹபூப் பாஷாவின் விருப்பம். மேலும் படிக்க


பேசிய தொகையை தராமல் அலைக்கழிக்கும் லியோ குரூப்? - காவல்நிலையத்தில் காத்திருக்கும் நா ரெடி கலைஞர்கள்!


விஜய் நடித்து வெளியாக இருக்கும் லியோ (Leo) திரைப்படத்தில் 'நான் ரெடி தான் வரவா..' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய நடனக் கலைஞர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்து வெளியாக இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் படிக்க


28 ஆண்டுகள் கடந்தன... மிஸ் யூ ப்பா... அப்பாவின் நினைவாக தமனின் கீதாஞ்சலி...


தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் தமன் இசையமைப்பாளராக  அறிமுகமானது 2009-ஆம் ஆண்டு வெளியான 'சிந்தனை செய்' திரைப்படத்தில். பின்னணி இசையிலும் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும் தமன் இதுவரையில் 110க்கும் மேற்பட்ட படங்களுக்கும் ஏராளமான இசை ஆல்பங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க


நடுவானில் விமானத்தில் முத்தம்.. ரன்பீர் - ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி.. அனிமல் முதல் பாடல் அப்டேட்!


அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அனிமல்’. தெலுங்கு, தமிழ் , இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிபெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படம் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு பாலிவுட்டில் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது  ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து இவர் இயக்கியிருக்கும் திரைப்படம் அனிமல். மேலும் படிக்க