பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதி.. ‘மெரி கிறிஸ்துமஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!


கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து வெளியாக இருந்த விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான ‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், தமிழ், இந்தி  என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. நடிகை கத்ரினா கைஃப் உடன் முதன்முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதி கைக்கோர்த்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஷூட்டிங் தொடங்கியே அதிகரித்தன. மேலும் படிக்க


தினேஷ் போட்ட மாஸ்டர் பிளான்.. மணிக்கு சென்ற ஸ்டார்.. எரிச்சலின் உச்சத்தில் மாயா!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் ஒரே ரணகளமாக தான் உள்ளது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ப்ரோமோவில் கமல்ஹாசன் சொன்னது போல வீடு இரண்டாக மட்டும் அல்ல சுக்கு நூறாக வெடித்து சிதறி வருகிறது. அனைவரும் சிறப்பாக அவர்களின் கேமை ஆடி வருகிறார்கள்.  எப்போ எப்போ என சண்டைக்கு ரெடியாக காத்திருக்கும் ஒரு கும்பல் பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே இருக்கும். அந்த வகையில் நேற்றைய தினம் பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் என்ற பெயரில் தினேஷை ஏத்திவிட வீடே பத்தி எரிந்தது. மேலும் படிக்க


அட.. கௌதம் மேனனின் ‘காதல் ஹீரோவாக’ எஸ்.ஜே.சூர்யா.. கோலிவுட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!


கெளதம் மேனன் இயக்கி விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரித்து வர்மா, சிம்ரன், விநாயகன், ஆர் பார்த்திபன், கெளதம் மேனன், ராதிகா சரத்குமார், டி டி நீலகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். பொதுவாகவே  ஆக்‌ஷன் இருந்தாலும் காதலை தன்னுடைப் படங்களில் மையப்படுத்தியே இயக்கி வந்திருக்கிறார் கெளதம் மேனன். மேலும் படிக்க


ஒரு தெய்வம் தந்த பூவே.. காயத்ரி யுவராஜுக்கு பிறந்தது பெண் குழந்தை.. ரசிகர்கள் குவிக்கும் வாழ்த்து மழை..!


பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைத்தளங்களில் பகிர்த்துள்ளார். தற்போது இது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உற்சாகமான செய்தி! இளவரசி வந்தாள் !! இன்று அதிகாலையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. எங்களது தாயின் பிறந்தநாளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் படிக்க


திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் திருப்பூர் சுப்ரமணியம்!


திரைப்படங்களின் வசூல் குறித்து தொடர்ச்சியான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருபவர் திருப்பூர் சுப்ரமணியம்.  சக்தி ஃபிலிம்ஸ் என்கிற திரையரங்கத்தை நடத்தி வரும் சுப்ரமணியம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்களின் சங்கத் தலைவர் பதவியை நிர்வகித்து வந்தார். மேலும் படிக்க


தவமாய் தவமிருந்த நிஜம்.. இயக்குநர் சேரனின் அப்பா பாண்டியன் மறைந்தார்..


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும் நடிகருமான சேரனின் (Director Cheran) தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவ.16) காலமானார். அவருக்கு வயது 84. தான் இயக்கிய படங்களுக்காக மூன்று தேசிய விருதுகள் வென்றும், பல வெற்றிப் படங்களைக் கொடுத்தும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் இயக்குநர் சேரன். இவரது தந்தை எஸ்.பாண்டியன் இன்று காலை 6.30 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள அவரது சொந்த ஊரான பழையூர்பட்டியில் உயிரிழந்தார். மேலும் படிக்க