கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து வெளியாக இருந்த விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.


மெரி கிறிஸ்துமஸ்


சூப்பர்ஹிட் பாலிவுட் திரைப்படமான ‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், தமிழ், இந்தி  என இரு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’.


நடிகை கத்ரினா கைஃப் உடன் முதன்முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதி கைக்கோர்த்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ஷூட்டிங் தொடங்கியே அதிகரித்தன. மேலும் இவர்களுடன் சண்முகராஜா, கவின் ஜெய்பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ், சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். பிரபல நடிகை ராதிகா ஆப்தே இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பாலிவுட் இசைமைப்பாளர் பிரித்தம் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


மீண்டும் தள்ளிப்போன ரிலீஸ்


இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், சென்ற ஆண்டு கிறிஸ்துமஸூக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில்,  இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்ந்து தள்ளிப்போய், இறுதியாக இந்த ஆண்டு கிறிஸ்துமஸூக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டு, வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி இப்படம் பொங்கல் வெளியீடாக வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.


பொங்கல் ரேஸில் விஜய் சேதுபதி


இப்படத்தின் மூலம் நடிகை கத்ரினா முதன்முறையாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவரது தமிழ் ரசிகர்களும் பெரும் உற்சாகத்துடன் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.


ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் பொஙல் ரேஸில் கலந்துகொண்டுள்ள நிலையில், தற்போது மெரி கிறிஸ்துமஸ் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும் பொங்க ரேஸில் இணைந்துள்ளார்.


பொங்கல் ரேஸில் ரஜினிகாந்த், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என ஸ்டார் ஹீரோக்கள் இணைந்துள்ள நிலையில் கோலிவுட் வட்டாரத்தில் கடும் போட்டா போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ், இந்தியில் ரிலீஸ்


இந்நிலையில் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் நடிகர் எனும் அடையாளத்தை மட்டும் தாண்டி, அனைத்து மொழி மக்களுக்கும் பரிச்சயமான நடிகராக மாறியுள்ளார். முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் ஃபார்ஸி இந்தி வெப் சீரிஸ், மும்பைக்கார் (மாநகரம் பட ரீமேக்) திரைப்படம் ஆகியவை இந்தியில் வெளியாகின.


நடிகர் விஜய் சேதுபதி இவற்றில் சொந்தமாக இந்தி டப்பிங்கும் செய்த நிலையில், இவரது பாத்திரங்கள் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. ‘இப்படத்தின் சமீபத்திய போஸ்டர்கள் ஏற்கெனவே விஜய் சேதுபதியை ரசிக்க வைத்துள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தின் இந்தி பதிப்பிலும் விஜய் சேதுபதி சொந்தக் குரலில் டப் செய்திருப்பார் எனக் கூறப்படுகிறது