தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி.. உடல்நலக்குறைவால் 80’ஸ் ஹீரோ கங்கா காலமானார்..
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் கங்கா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “உயிருள்ள வரை உஷா” படம் அவருக்கு மட்டுமல்லாது அந்த படத்தில் நடித்த அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் கங்கா. இதனைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி போன்ற படங்களில் நடித்தார். மேலும் படிக்க
கலைதான் உன்னை தேர்ந்தெடுக்கிறது.. ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஓர் விரிவான பார்வை!
எப்போதும் கார்த்திக் சுப்பராஜின் படங்களைப் பற்றி பேசினால் அதில் “நல்லாருக்கு ஆனா....என்பது போல் நிறைவில்லாத ஒரு உணர்வு ரசிகர்களுக்கு இருப்பதை கவனிக்கலாம். முழுமையான ஒரு கதையைவிட, ஒரு கதையின் தொடக்கப்புள்ளியால் அதிகம் ஈர்க்கப்பட்டு ஏதோ ஒரு கட்டத்தில் திரைக்கதையில் அந்த சிறிய அம்சமும் நீர்த்துப் போகும் அனுபவமே அவரது படங்களில் இருக்கின்றன. மேலும் படிக்க
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் பூர்ணிமா? வருத்தத்தில் ரசிகர்கள்..
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து பூர்ணிமா மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு வெளியேறுவார் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 ரசிகர்களிடையே பெரிதாக பேசுபொருளாகியுள்ளது. ஒரே வீட்டுக்குள் இருக்கும் 18 போட்டியாளர்களிடையே நடைபெற்றும் மோதல், வாக்குவாதம் பல்வேறு விமர்சனங்களுக்கும் வழி வகுத்துள்ளது. மேலும் படிக்க
திரையுலகில் மீண்டும் சோகம்.. பிரபல நடிகர் சந்திரமோகன் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி..
பழம்பெரும் தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1946 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பம்மிடிமுக்கலாவில் பிறந்தார். இவர் 1966 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரங்குல ராட்டினா படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். மேலும் படிக்க
கமல் சாரால் நான் டைட்டில் வாங்கியதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா.. அசீம் ஆதங்கம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே பரபரப்பு இருப்பது வழக்கமான ஒன்றுதான். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை எந்த ஒரு இடத்திலும் பரபரப்பு குறையாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல போனால் இந்த சீசன் மிகுந்த சர்ச்சைக்குரிய சீசனாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும் படிக்க
மறைந்த நடிகர் கிருஷ்ணாவுக்கு சிலை... திறந்து வைத்து மரியாதை செய்த கமல்ஹாசன்...
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும் டோலிவுட் சினிமாவின் முன்னணி ஸ்டார் நடிகருமான மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் ஒரு அழுத்தமான முத்திரையை பதித்தவர். கடந்த ஐம்பது ஆண்டு காலமாக திரைத்துறையில் நடிகர் கிருஷ்ணாவின் பயணம் சிறப்பானதாக இருந்தது. மேலும் படிக்க