தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை. வடசென்னை, அசுரன் என இவர் இதுவரை இயக்கிய அத்தனை படங்களும் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள். தற்போது, சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கியுள்ளார்.


இந்த நிலையில், சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் தெலுங்கிலும் கால்தடம் பதிக்க உள்ளார். அதாவது, தமிழில் மட்டுமே படங்களை இயக்கி வந்த வெற்றிமாறன் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர். அவர் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இந்த படம் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 32வது படமாக உருவாகும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர். இந்தியா அறிந்த ஒரு நடிகராக மாறியுள்ளார். மிகவும் யதார்த்தமாகவும், அதேசமயம் ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகளுடன் படம் இயக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் பாட்டு, சண்டை என அதகளப்படுத்தும் ஜூனியர் என்.டி.ஆர். இணைவது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இவர் இயக்கும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது. மேலும், வெற்றிமாறன் புதியதாக எழுதியுள்ள 3 பாகங்களை கொண்ட கதையில் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது பாகத்தில் தனுஷூம் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் விடுதலை ரிலீசிற்கு பிறகு வாடிவாசல் படத்தில் முழு வீச்சில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையடுத்து, அவர் ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால். வடசென்னை 2ம் பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகிக்கொண்டே வருகிறது. வெற்றிமாறன் தனுஷை வைத்து இயக்கிய அசுரன் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்று ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப்படமாக அமைந்தது.


இந்த நிலையில், வெற்றிமாறனே நேரடியாக களமிறங்குவது ஜூனியர் என்.டி.ஆரின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. தனுஷ் நடிப்பிலும் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரீலீசுக்கு தயாராக உள்ளன. 


மேலும் படிக்க: Ranjit Jeyakodi: அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை... மைக்கேல் படம் பற்றிய விமர்சனங்களுக்கு இயக்குநர் பதில்!


மேலும் படிக்க: Pathaan : பாகுபலி 2 ரெக்கார்டையும் முறியடிச்சாச்சு.... பதான் தொடர் சாதனை... உற்சாகத்தில் படக்குழுவினர்!