டோலிவுட் தொடங்கி ’பாகுபலி’, ’ஆர் ஆர் ஆர்’ படங்களின் இமாலய வெற்றிகளை அடுத்து இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக எஸ்.எஸ்.ராஜமௌலி உருவெடுத்துள்ளார்.


மேலும் இந்தியா தாண்டி பெரும் வசூலை வாரிக்குவிக்கும் இவரது படங்களின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உலக அளவில் அதிகரித்துள்ளது.


கனவுக்கதை மகாபாரதம்


இந்நிலையில் மகாபாரதக் கதையே தன் கனவுப் படம் என்று பல மேடைகளிலும் குறிப்பிட்டு வரும் இயக்குநர் ராஜமௌலி, தன் சமீபத்திய நேர்காணலில் இக்கதையை எப்போது இயக்கப் போகிறார் என்பது குறித்து சுவாரஸ்யமானத் தகவல் ஒன்றை அளித்துள்ளார்.


மேலும் படிக்க: Watch Video : உழைச்சுக்கிட்டே இருப்பேன்.. மீண்டும் ஷூட்டிங் புறப்பட்ட சூப்பர் ஸ்டார் நயன்தாரா.. வைரலாகும் ஏர்போர்ட் வீடியோ


SAC Shoba Temple Visit: திருக்கடையூர் கோயிலில் ஆயுள் விருத்தி ஹோமம் செய்த விஜயின் பெற்றோர்.. வைரல் ஃபோட்டோ..


”தற்போது நான் மகேஷ் பாபு படம் உள்பட நான்கு படங்களை எடுக்க உள்ளேன். இந்தப் படங்களை முடித்த பிறகு தான் நான் என் கனவுப் படமான மகாபாரதத்தை இயக்க முடியும். இதற்கெல்லாம் நீண்ட காலம் ஆகும் என்பதால், படத்தை எப்போது தொடங்குவது என்பது குறித்து நான் இன்னும் முடிவெடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், ராஜமௌலி இயக்கப் போகும் ’மகாபாரதம்’ திரைப்படம் பல்வேறு உலக மொழிகளில் 2,500 கோடி ரூபாய் செலவில் மூன்று பாகங்களாக வெளயாகும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


மகேஷ்பாபுவுடன் அடுத்த படம்


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவை எஸ்.எஸ்.ராஜமௌலி அடுத்ததாக இயக்க உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களுள் ஒன்றான ’இண்டியானா ஜோன்ஸ்’ பாணியில் இப்படம் இருக்கும் என்றும், ஆப்பிரிக்காவில் இப்படம் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Director Hari: சாமி படம் அப்போ பயம்.. வடிவேலுக்கு எழுதுன அந்த சீன்.. நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் ஹரி!


''கையில சாக்லெட்.. கிருத்திகா பயந்து ஓடுனாங்க'' - உதயநிதியின் காதல் கதையை போட்டு உடைத்த அன்பில்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண