கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் மருமகளாகவும், இளம் அரசியல் வாதியும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் காதல் மனைவியான கிருத்திகா, தமிழில் வணக்கம் சென்னை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியப்போதும் அந்தளவிற்கு ரீச் ஆகவில்லை.
இதனையடுத்து தொடர்ந்து பல படங்களை இயக்கிய கிருத்திகா வெப்சீரிஸ், வைரமுத்துவின் புரோஜெட் போன்றவற்றில் பிஸியாக இருந்து வருகிறார். திரைத்துறையில் கவனம் செலுத்துவதோடு தனது குடும்ப வாழ்க்கையையும் நேர்த்தியாக நடத்திவருகிறார். உதயநிதி – கிருத்திகாவின் மகன் இன்பன் உதயநிதி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், அவருக்கு பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி வருகிறார் கிருத்திகா. இந்நிலையில் உதயநிதியின் பெஸ்ட் நண்பரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் உதயநிதியின் காதல் குறித்தும் கிருத்திகா குறித்தும் பேசியுள்ளார்.
அது தொடர்பான வீடியோ இணையத்தில் வரைலாகி வருகிறது. அந்த வீடியோவில் ''ஒரு ஆள காட்டணும்னு என்னைய உதய் அழைச்சுட்டு போனாரு. வீட்டு பக்கத்துல உள்ள ஒரு கோவில்ல நடன அரங்கேற்றம். கையில ஒரு சாக்லெட்ட வாங்கிட்டு அரங்கேற்றத்துல ஆடின பொண்ண காட்டினாரு. எங்கள பாத்ததும் கிருத்திகா டான்ஸ பாதிலையே நிப்பாட்டிட்டு ஓடிட்டாங்க. ஹோட்டல், சினிமான்னு போற இடமெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவாரு உதய். கிருத்திகா ஒரு அன்பான சகோதரி. ரொம்ப கேரிங்கான ஆளு. சமூகத்து மேல ஒரு பற்றுள்ளவர். நான் பழக தொடங்கியதில் இருந்து கிருத்திகா அப்படித்தான். சிஎம் மருமகள், உதயநிதி மனைவி என்றெல்லாம் இருக்காது. ரொம்பவும் எளிமையா இருப்பாங்க. உதயநிதி மாதிரிதான் அவங்களும். ரெண்டு பேரும் சரியான ஜோடி. நானும் உதயுமே அப்படித்தான். எங்களுக்கு அரசியல்வாதின்னு சொல்லிக்கறதெல்லாம் பெரிய விஷயமில்லை. இப்ப விட்டாலும் ஜாலியா கிரிக்கெட் ஆடிட்டு சுத்திட்டு இருப்போம். எங்க நட்பு ப்ளான் பண்ணிலாம் வர்ல. அது எப்போ தொடங்கிச்சுனே தெரியல'' என்றார்.
முன்னதாக “ CM வீட்டு மருமகளா எப்படி ஃபீல் பண்ணுறீங்க ?” என்ற கேள்விக்கு பதிலளித்திருந்த கிருத்திகா, ”எல்லோரும் இதைத்தான் கேப்பாங்க ..CM வீட்டு மருமகள் எப்படி இவ்வளவு எளிமையாக இருக்கீங்கன்னு. வீட்டுல உதய்யும் அப்படிதான் இருக்காங்க. அத்தையும் அப்படிதான், மாமாவும் அப்படித்தான்.. அதுனால எனக்கும் எந்த வித்தியாசமும் தெரியல.. வெளியே இருந்து பார்க்கும்பொழுது வேற மாதிரியான வீடு செட்டப் , வேற மாதிரியான லைஃப்னு இருப்பாங்களோன்னு மக்கள் நினைப்பாங்க. எல்லோருமே செலிப்ரிட்டினாலே அப்படித்தான் நினைப்பாங்க. ஆனால் மற்ற குடும்பங்களை போலத்தான் நாங்களும், எங்களுக்கு வித்தியாசமெல்லாம் ஒன்னும் இல்லை’’ என்றார்.