2022 ஆம் ஆண்டின்  உலகளவில் சிறந்த படங்களில் பட்டியலில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி படம் 2 ஆம் இடம் பிடித்துள்ளது. 


ஒரு வழியாக 2022 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களும் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவும் மெல்ல மீண்டு வருகிறது. நடப்பாண்டில் கமல்,அஜித்,விஜய்,சூர்யா, தனுஷ், விக்ரம்,விஷால்,விஷ்ணு விஷால்,சிவகார்த்திகேயன்,விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் என கிட்டதட்ட தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தனர். இதனைத் தவிர ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்., யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் -2 ஆகிய படங்களும் தமிழில் ரிலீசாகி வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. 




இதனைத் தவிர்த்து இந்தாண்டின் அடுத்த 6 மாதத்தில் பொன்னியின் செல்வன், பிரின்ஸ் என படங்கள் வரிசைக்கட்டி நிற்பதால் இந்தாண்டு தமிழ் சினிமா தனது பழைய நிலைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா காலத்தில் வீட்டில் மக்கள் முடங்கிய நிலையில் ஓடிடி தளங்கள் நல்ல வரவேற்பை பெற தொடங்கின. இதனால் சாமானிய ரசிகர்களும் உலகளவிலான படங்களை பார்க்க தொடங்கினர். தமிழ் படங்களுக்கும் உலகளவில் ரசிகர்கள் கிடைக்க தொடங்கினர். 


இந்நிலையில் உலகளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் லெட்டர்பாக்ஸ்டி இணையதளம் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளியான சிறந்த படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மக்களின் தரும் ரேட்டிங்கின் அடிப்படையில் குறைந்தது 1000 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் ஓடிடி,நேரடி தியேட்டர் ரிலீஸ், டாக்குமெண்டரி என அனைத்தும் கலந்து டாப் 25 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 




முதல் இடத்தை Everthing everywhere all at once என்ற சீன மொழி படம் பிடித்துள்ள நிலையில் 2 ஆம் இடத்தை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் சேதுபதி நடிப்பில், மணிகண்டன் இயக்கிய “கடைசி விவசாயி” படம் 2 ஆம் பிடித்துள்ளது. இந்த படம் விவசாயம் அழிந்து வரும் நிலையில் மலைக்கிராமத்தில் வசிக்கும் விவசாயி  தனது நிலத்தையும், அதில் உள்ள பயிர்களையும் காப்பாற்ற நினைப்பதை மையமாக கொண்டு படமாக்கப்பட்டிருந்தது. 

ஏற்கனவே படம் வெளியான சமயத்தில் போதுமான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் தற்போது உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பட்டியலில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர்., படம் 6வது இடத்தையும், கமல் நடித்த விக்ரம் படம் 11வது இடத்தையும் பெற்றுள்ளது. வசூலில் சாதனைப் படைத்த படங்களை எல்லாம் தாண்டி குறைந்த பட்ஜெட் படமான கடைசி விவசாயிக்கு அங்கீகாரம் கிடைத்தது நிச்சயம் பல கோடி செலவில் படம் எடுப்பவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண