இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது இங்கிலாந்து அணி 378 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடி வருகிறது.


இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அப்போது, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது பிரபல பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை நடுவர் “வாயை மூடிகிட்டு பேட் பண்ணு பிராடி” என்று பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.




முதல் இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவர் போட்டி நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரோவிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால், கோபமடைந்த நடுவர் ரிச்சர்ட்” நாங்கள் அம்பயரிங்கை செய்கிறோம். நீங்கள் பேட்டிங் செய்யுங்கள். சரியா?” என்று கேட்டுள்ளார்.  






போட்டி நடுவரின் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் ஸ்டூவர்ட் பிராட் களத்தில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. நடுவர் ரிச்சர்ட் மீண்டும் எரிச்சலடைந்தார். உடனே, அவர் கோபத்தில் “பிராடி, பிராடி..! வாயை மூடிகிட்டு பேட் பண்ணு” என்றார். இந்த சம்பவம் அனைத்தும் ஸ்டம்ப் அருகே இருந்த மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது.





எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி ஸ்டூவர்ட் பிராடிற்கு மறக்க வேண்டிய போட்டியாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இந்த போட்டியில் இந்திய 550 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்தாலும், பும்ராவிடம் ஒரே ஓவரில் 35 ரன்களை விட்டுக்கொடுத்து டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதுமட்டுமின்றி, அம்பயரே “வாயை மூடிகிட்டு பேட் பண்ணு” என்று எரிச்சல் அடையும் அளவிற்கு செயல்பட்டு ரசிகர்களின் ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளார்.


மேலும் படிக்க : IND vs ENG, Day 4 Highlights: அரைசதம் கடந்த ரூட், பேர்ஸ்டோவ்.. வெற்றி முகத்தை நோக்கி இங்கி.. கடைசி நாளில் இந்தியா சாதிக்குமா?


மேலும் படிக்க : Racially Abused : எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இனவெறி சர்ச்சை..! இந்திய ரசிகர்கள் வேதனை..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண