இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனக்கு 80 வயது நிறைவடைந்ததை அடுத்து, திருக்கடையூர் அமிரகடேஸ்வரர் கோயிலுக்கு தன் மனைவியுடன் சென்று ஆயுள் விருத்தி ஹோமம் செய்துள்ளார்.
மேலும் தன் மகன் விஜய் பெயரிலும் அர்ச்சனை செய்து எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதியினர் சிறப்பு வேண்டுதல் செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளன.
முன்னதாக தன் 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது.
மேலும் தந்தையின் 80ஆவது பிறந்தநாளில் விஜய் பங்கேற்காதது குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்தக் கோயில் விசிட்டிலும் விஜய் வருகை தராதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக விஜய் பெயரில் எஸ்.ஏ.சி கட்சி தொடங்கியதாக அறிவித்தது தொடங்கி தந்தை மகன் இடைவெளி அதிகரித்ததாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில், விஜய் தன் குடும்ப நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்காமல் தவிர்த்து வருவது அதனை உறுதி செய்யும் விதமாக உள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்.ஏ.சி - ஷோபா திருக்கடையூர் கோயிலில் பூஜை செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.
தமிழ் சினிமாவில் பன்முகக் கலைஞராக வலம் வந்துள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், 1981இல் ’சட்டம் ஒரு இருட்டறை’ படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வெற்றிப்பட இயக்குநராக வலம் வந்துள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் திரை வாழ்வில் திருப்புமுனை படங்களைத் தந்த எஸ்ஏசி, தன் மகன் விஜய்யையும் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்