Rasavathi Teaser: ஒரே படத்தில் இத்தனை கேரக்டரா.. ஆச்சரியப்பட வைத்த அர்ஜூன் தாஸின் “ரசவாதி” டீசர்..!

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 

Continues below advertisement

அர்ஜூன் தாஸ்

லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்கிற ஒற்றை வசனத்தில் வைரலாகி இன்று வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அர்ஜூன்தாஸ். வில்லனாக நடித்து வந்த அர்ஜூன்தாஸ் கதாநாயகனாகவும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான் அநீதி படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இதன் பின் தற்போது அர்ஜூன் தாஸ்  நடித்துள்ள படம் ரசவாதி . முன்னதாக இந்தப் படத்தில் போஸ்டர்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

 

 

ரசவாதி

அர்ஜூன்தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில்  ரம்யா சுப்ரமணியம் , ரிஷிகாந்த், தான்யா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டி.என் .ஏ இந்தப் மற்றும் சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தற்போது இந்தப் படத்தில் டீசர் வெளியாகி இணையதளத்தில் கவனம் பெற்று வருகிறது. இந்த ஒட்டுமொத்த டீசரிலும் ஒரு கதாபாத்திரமும் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. ஒவ்வொருவரின் முகத்தில் பயம் , வஞ்சம் என பலவிதமான உணர்வுகள் பிரதிபலிக்க முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சாந்தகுமார்

மிக சில படங்களை இயக்கி தனக்கென தேர்ந்தெடுத்த ரசிகர்களைக் கொண்ட சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். தியாகராஜா குமாரராஜா, ராம் , சாந்தகுமார் உள்ளிட்டவர்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். மெளனகுரு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சாந்தகுமார். மெளனகுரு திரைப்படம் வெளியான சமயத்தில் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் பிற்காலத்தில் அதிகளவிலான மக்களால் பேசப்பட்டது. தொடர்ந்து இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து ஆர்யா நடித்து மகாமுனி படத்தை இயக்கினார். ஆர்யா இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிய பரிணாமத்தில் இப்படம் காட்டியது. சினிமாவிற்கு வந்து 12 ஆண்டுகளில் தன்னுடைய மூன்றாவது படத்தை தானே தயாரித்து இயக்கியுள்ளார் சாந்தகுமார்.


மேலும் படிக்க : Mission Chapter-1 Trailer: ”அச்சம் என்பது இல்லையே” - அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர்-1 டிரெய்லர் வெளியீடு

Vijay Sethupathi: விடாமல் துரத்தும் கிரிமினல் வழக்கு.. விசாரணையை எதிர்கொள்ள விஜய்சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

Continues below advertisement
Sponsored Links by Taboola