ஏ. எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் மிஷன் சாப்டர்-1 படத்தில் எமி ஜாக்சன் , நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படம் ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ள நிலையில் தற்போது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், குழந்தையை எதிரிகளுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அருண் விஜயை கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள எமிஜாக்சன் சண்டை காட்சிகளில் அசத்தி அலறவிடுகிறார்.
தனது மகளின் மருத்துவத்திற்காகவும், ஆபரேஷனுக்காகவும் லண்டன் செல்லும் இந்தியர் ஒருவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் அவர் சிறையில் மாட்டிக் கொள்கிறான். பின்னர் அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறான்? அவர் சந்தித்த தடைகள் என்ன என்பது குறித்த படம்தான் ‘மிஷன் சாப்டர் ஒன்’ படத்தின் கதை.
மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகியப் படங்களை இயக்கிய ஏ.எல் விஜய் அருண் விஜய்யை வைத்து ஆக்ஷன் படத்தில் களமிறங்கியுள்ளார். ஏற்கெனவே ஏ.எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம், தாண்டவம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் எமி ஜாக்ஸன். கடைசியாக ரஜினி நடித்த 2.0 படத்தில் எமி ஜாக்சன் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் எமிஜாக்சன் கம்பேக் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களை தவிர, மலையாள நடிகை நிமிஷா சஜயன் தமிழில் தனது மூன்றாவது படமாக மிஷன் சாப்டர்-1 படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: கல்கியின் பொன்னியின் செல்வன் வேற மாதிரி.. திரைப்படம் மணியின் ஓவியம் - இளையராஜா