ராஜ்குமார் பெரியசாமி
ஏ.ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை இயக்கினார். இதனைத் தொடர்ந்து கெளதம் கார்த்தி நடித்த ரங்கூட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது அமரன் படத்தின் மூலம் தமிழ் , இந்தி , தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை அமரன் படத்தில் கமர்சியல் சினிமாவுக்கான சமரசங்கள் இல்லாமல் மிக எதார்த்தமாக இப்படத்தை அவர் கையாண்டுள்ள விதம் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி.
தனுஷ் படம் பற்றி ராஜ்குமார் பெரியசாமி
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. கடந்த மாதம் இப்படத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. சமீபத்தில் ஹாலிவுட் ரிப்போர்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராஜ்குமார் பெரியசாமி தனுஷ் படத்தின் கதைப் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்
" அமரன் படன் நாம் அறிந்த ஒரு மனிதரைப் பற்றிய கதை. ஆனால் இதேபோல் நிறைய கொண்டாடப்படாத மனிதர்கள் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அப்படியான ஒரு நபரின் வாழ்க்கையை தான் நான் படமாக எடுக்க இருக்கிறேன். இப்படம் ஒரு சர்வைவல் டிராமாவாக இருக்கும் " என ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்"
குபேரா
தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிப்பு தவிர்த்து இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரு படங்களை தனுஷ் அடுத்தடுத்து இயக்கியுள்ளார். தவிர போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து ஆகிய இருவரின் கதைகளில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க : புஷ்பா 2 வேணாம்..பா ரஞ்சித் படத்தை பாருங்கள்...ஹைதராபாத் அசிஸ்டெண்ட் கமிஷ்னர் பரிந்துரை
Watch Video : எனக்கு முன்கோபம் ஜாஸ்தி...கையில் சிகரெட்டுடன் அஜித் இருக்கும் வீடியோ வைரல்