மயிலாடுதுறையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேக் வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.
கேக்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என்றாலே கேக்குகளுக்கு தனி இடமும், பெரும் பங்கும் உண்டு. கிருஸ்துமஸ், புத்தாண்டு தினத்தன்று கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் கூறி மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பரிமாறி கொள்கின்றன. அந்த வகையில் கேக்கு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பேக்கரிகள், தங்களின் தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக கேக்குகளில் என்ன புதுமையை செய்து காண்பிக்க முடியுமோ அதனை செய்து வருகின்றனர்.
கேக் வகைகளில் புதுமை
அதன் ஒன்றாக மயிலாடுதுறை நகரில் உள்ள தனியார் பேக்கரி நிறுவனங்கள் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு பல வகையான கேக்குகளின் கண்காட்சி வைத்துள்ளது. இந்த கண்காட்சியில் கண்ணை கவரும் வகையில் ஏராளமான வடிவங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சுவைகளில் தயாரிக்கப்பட்ட கேக்குகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என தனித்துவமாக கிறிஸ்மஸ் தாத்தா, கிப்ட், மரம், ஸ்டார் உள்ளிட்டவை கேக் மீது வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இன்டர்நேஷனல் ஸ்வீட், அரபிக் பெல்ஜியம் சாக்லேட் கேக் வகைகள், ரசமுல்லா கேக், சாக்கோ கேமல் க்ரென்ச் கேக், ஸ்டாபெரி கேக், அது மட்டும் இன்றி பார்பி பொம்மையை கேக்குகளால் அலங்கரித்து பல வடிவங்களில் விதவிதமான கேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கேக்குகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இவைகள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
வாடிக்கையாளர்களை கவர்ந்த கேக்குகள்
மேலும் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த கேக் கண்காட்சியில் கலந்து கொண்டு கேக் வகைகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தும் கண்டு ரசித்தனர். புதிய வகை கேக்குகளை ஆர்டர் செய்து வாங்கிச் செல்கின்றனர். கிருஸ்துமஸ் மற்றும் நியூ இயர் பண்டிகைக்காக கண்ணை கவரும் வகையில் விதவிதமாக கேக்குகளை செய்து வைத்து கேக் கண்காட்சி நடத்திய பேக்கரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் மயிலாடுதுறையில் உள்ள பேக்கரிகளில் கிறிஸ்துமஸ் கேக் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.