அஜித் குமார்


கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் தனது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டாகவும் இருந்து வருகிறார் நடிகர் அஜித் . எந்த வித சர்ச்சைகளில் கலந்துகொள்ளாத அஜித் தனது ரசிகர்களையும் அந்த மாதிரியான சர்ச்சைகளில் ஈடுபடாமல் தங்கள் லட்சியத்தை பின் தொடரவே ஊக்குவித்து வருகிறார். கடவுளே அஜித்தே என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதை விரும்பாத அஜித் தன்னை அப்படி அழைக்க வேண்டாம் கூறி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஒவ்வொரு ரசிகர்கருக்கும் ரோல் மாடலாக இருக்கும் அஜித்திற்கு ஒரு காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. 


கையில் சிகரெட்டுடன் அஜித் 


நேர்காணல் ஒன்றில் அஜித் கையில் சிகரெட் வைத்துக் கொண்டே பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது நேர்காணல்களில் புகைப்பிடித்துக் கொண்டே பேசிய வீடியோவை பலர் பார்த்துள்ளார்கள். அதேபோல் அஜித் இந்த வீடீயோவில் தன்னைப் பற்றி பேசுகிறார் " எனக்கு முன்கோபம் ரொம்ப அதிகம். எனக்கு ஒன்னு பிடிக்கவில்லை என்றால் அதை உடனே சொல்லிவிடுவேன். மனசில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே எல்லாம் எதுவும் பேச மாட்டேன். " என அஜித் தன்னைப் பற்றி இந்த வீடியோவில் கூறுகிறார்




அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படம் வரும் பொங்கல் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. மகிழ் திருமேணி இயக்கும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. த்ரிஷா , ஆரவ் ,அர்ஜூன் , ரெஜினா உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் முடிவடைந்துள்ளது. 


இது தவிர்த்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.




மேலும் படிக்க : புஷ்பா 2 வேணாம்..பா ரஞ்சித் படத்தை பாருங்கள்...ஹைதராபாத் அசிஸ்டெண்ட் கமிஷ்னர் பரிந்துரை


Sunny Leone : சன்னி லியோன் பேரில் மோசடி... மாதாமாதம் 1000 ரூபாயை அமுக்கிய நபர்