அல்லு அர்ஜூன் சர்ச்சை
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த சர்ச்சை தற்போது பூதாரகரமாக வெடித்துள்ளது. முன்பு அல்லு அர்ஜூன் பக்கம் ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளார்கள். மேலும் உஸ்மானியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் அமைப்பினர் அல்லு அர்ஜூன் வீட்டின் முன்பு கல்வீச்சு நடத்தியது இந்த சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்விற்கு முழுக்க முழுக்க அல்லு அர்ஜூனின் அகம்பாவம் தான் காரணம் என தெலங்கானா முதலமைச்சர் குற்றம்சாட்டினார். மேலும் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா துணை காவல் ஆணையர் பல்வேறு வீடியோ ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.
பா ரஞ்சித் படங்களை பாருங்கள்
மேலும் " இந்த மாதியான நாயகர்களை வழிபடும் படங்களில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வீனடிக்காமல் கருத்துள்ள படங்களைப் பாருங்கள். பா ரஞ்சித் இயக்கிய படங்களுக்கு 2000 முதல் 4000 ரூபாய் வரைகூட செலவு செய்யுங்கள். அதே நேரத்தில் புஷ்பா 2 மாதிரியான படங்களை குறைவான விலையில் நீங்கள் ஓடிடி தளத்தில் கூட பார்க்கலாம். " என ஹைதராபாத் துணை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : தப்பிக்க வழியே இல்ல...அல்லு அர்ஜூனுக்கு எதிராக காவல்துறை வெளியிட்ட வீடியோ ஆதாரம்
அபூர்வ சகோதரர்கள் குட்டி கமல் உருவாம விதம்...வியக்கவைக்கும் உண்மைகள்