இயக்குனர் அட்லீ தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இயக்குனர் அட்லியின் முதல் திரைப்படமான ராஜா ராணி, ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம். காதல், சென்டிமெண்ட், காமெடிக்கு படத்தில் ஒரு குறையும் இல்லை. முதல் படத்திலேயே தரமான ஸ்கிரீன் பிளேவை கொடுத்திருந்தார். இதனால் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் இவர் விரைவில் பிரபலமானார். இதனையடுத்து இவர் நடிகர் விஜயை வைத்து இயக்கிய தெறி,மெர்சல் ,பிகில் ஆகிய திரைப்படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்ததுடன் அட்லீக்கு பெயர் பெற்று தந்தது. இவர் படங்களில் இருந்து காட்சிகளை காப்பி அடிப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டின்சகளால் கிண்டலுக்கு ஆளாகி வந்தாலும் தோல்வி படங்களையே கொடுக்காதவர் என பெயர் பெற்றவர் அட்லீ. இப்படி தொடர்ந்து தமிழ் திரை உலகில் சிறந்த இயக்குனராக விளங்கி வந்த அட்லீ திடீரென பாலிவுட் பக்கம் சென்றார்.
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் அட்லீ. இதில், நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக ஜவான் உள்ளது. பிகில் படத்திற்கு பின் அட்லீ இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவவில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. மேலும் விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து இணையத்தை அதிரவைத்தது. மாஸ் கமெர்ஷியல் ஆக்க்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது என்பதை டிரைலர் பார்க்கும்போது ஓரளவு நம்மால் யூகிக்க முடிகிறது. இதற்குள் அட்லீக்கே உரித்தான மனதை தொடும் செண்டிமென்ட் காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜவான் எனும் மிகப்பெரிய படத்தை இயக்க அட்லீ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அட்லீ இப்படத்திற்காக ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தால் கண்டிப்பாக அட்லீயின் சம்பளம் எதிர்பார்க்கமுடியாத உச்சத்தை தொடும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க