இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்து மௌனம் பேசியதே மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். இவர் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவான் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.


இவர் இயக்கிய படங்களில் ஆதி பகவான் தவிர்த்து மற்ற அனைத்து படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றவை. அமீர் இயக்கிய அனைத்து படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சினேகன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.


இந்த சூழலில் ஆதி பகவான் படத்துக்கு பிறகு அமீர் எந்தப் படத்தையும் இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். யோகி படத்தில் ஆர்மபித்த அமீரின் நடிப்பு பயணம் வடசென்னையில் ராஜன் கதாபாத்திரத்திற்கு பலரது கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது.




இந்நிலையில், தற்போது தான் நாயகனாக நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை அமீர் வெளியிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் அறிவித்துள்ளார்..


‘அதர்மம்’, ‘பகைவன்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா, அமீர், சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க சினேகன் பாடல்களை எழுதுகிறார்.


அமீரின் முந்தைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை அமீர் ஃபிலிம் கார்ப்பரேசன் மற்றும் ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தின் போட்டோஷூட் நேற்று நடைபெற்றது.


நீண்ட நாள்களுக்கு பிறகு அமீர் - யுவன் - சினேகன் கூட்டணி இணைவதாலும், முதல்முதலாக அமீர் நடிக்கும் படத்துக்காக யுவன் இசையமைப்பதாலும் படத்தின் இசை மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!


INDvsNZ 2nd Test Day 4 LIVE: அஸ்வின், ஜெயந்த் சுழற்சி... நியூஸி, வீழ்ச்சி... 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி


இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் குள்ள மனிதர் - சாதனை படைத்த ஷிவ்பால்..!