நடிகரும், மநீம தலைவருமான கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். கடந்த சனிக்கிழமையன்று டிஸ்சார்ஸ் ஆன கமல், மருத்துவமனையில் இருந்து நேராக பிக்பாஸ் சூட்டிற்கு சென்றார். அங்கு அரங்கில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கொரோனா விதிகளின் படி சிகிச்சை பெற்றவர்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டும். சிகிச்சையிலிருந்து கமல் நேரடியாக சூட்டிங்கில் பங்கேற்றதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் கொரோனா விதிமுறையை கமல் மீறியிருப்பதாக தெரிகிறது.
அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு சென்ற கமல், இந்தியா திரும்பியதும். அவருக்கு இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இது தொடர்பாக உடனே பரிசோதனை செய்த அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் கமல் அனுமதிக்கப்பட்டார். அவர் குணமடைய வேண்டிய மக்கள் நீதி மய்யத்தினர் ட்விட்டர் ட்ரெண்டிங் உள்ளிட்ட நகர்வுகளை நிகழ்த்தினர். இந்நிலையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த கமல், கடந்த சனிக்கிழமை அன்று டிஸ்சார்ஜ் ஆனார்,
கடந்த நவம்பர் 24 ம் தேதி தான் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் இருந்து நேரடியாக அவர் பிக்பாஸ் செட்டிற்கு சென்று அங்கு சூட்டிங்கில் பங்கேற்றார். கொரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்கிற விதி இருப்பதால், அந்த விதியை கமல் மீறியதாக கூறப்படுகிறது.
இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அது குறித்து கேள்வி எழுப்பிய போது, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இந்த பதிலை அளித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்