INDvsNZ 2nd Test Day 4 LIVE: அஸ்வின், ஜெயந்த் சுழற்சி... நியூஸி, வீழ்ச்சி... 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்க உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும். 

ABP NADU Last Updated: 06 Dec 2021 10:17 AM
அஸ்வின், ஜெயந்த் சுழற்சி... நியூஸி, வீழ்ச்சி... 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 

Background

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் ஆடி வரும் நியூசிலாந்து அணி டி20 தொடரை இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திராவின் நிதானமான மற்றும் பொறுப்பான பேட்டிங்கால் கடைசி விக்கெட்டை இழக்காமல் ஆடி போட்டியை போராடி டிரா செய்தது.


மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது இன்னிங்சில் நேற்று விக்கெட் இழப்பின்றி 69 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, மூன்றாவது நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்து ஆடியது. கடந்த போட்டியில் 150 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் தொடர்ந்து இன்றும் சிறப்பாக ஆடினர். இந்திய அணி 276 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளேர் செய்தது.


இதையடுத்து, நியூசிலாந்திற்கு 540 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. இந்நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்க உள்ளது. இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும். 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.