கேரளாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசுப் அலி. இவரது LuLu குழுமம் ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்டு செயல்பட்டுவருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை நேரில் சந்திப்பதற்காக LuLu குழும தலைவர் யூசுப் அலி, அவருடைய மனைவி மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவருடைய கொச்சு கதவந்த்ரா இல்லத்திலிருந்து அவருக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.


திடீரென ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து சதுப்பு நில காட்டில் சிறிய அளவிலான விபத்தை சந்தித்தது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த யூசுப் அலி உட்பட அனைவரும் கீழே இறங்கி மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றனர். அப்போது அவர்களை ராஜேஷ் என்பவர் மற்றும் அவரது மனைவி யூசுல் அலி குடும்பத்தை காப்பாற்றினர்.




இந்நிலையில் தங்களை காப்பாற்றிய ராஜேஷ் மற்றும் அவரது மனைவியை யூசுப் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனையடுத்து பேசிய அவர், “என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றிய குடும்பத்தை நிச்சயம் ஒரு நாள் சந்திப்பேன் என்று நான் உறுதியளித்தேன். நான் சொன்னதைக் கடைப்பிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். சில மாதங்களுக்கு முன்பு, தம்பதியைச் சந்திக்க கொச்சி வந்தேன். ஆனால் இருவரும் கோவிட் பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது இதனால் ராஜேஷையும் அவரது மனைவியையும் சந்திக்கத் தவறிவிட்டேன்.




ஹெலிகாப்டர் சதுப்பு நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளான போது , ​​அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் குடையுடன் வந்து ஹெலிகாப்டரில் இருந்து என்னை வெளியே அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் என்னால் நடக்க முடியவில்லை. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் என்னை இறங்க உதவினார்கள்.  மனிதாபிமானத்தையும் அன்பையும் வெளிப்படுத்தியதற்காக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உதவிக்கு ஈடாக அவர்களுக்கு எந்த வெகுமதியையும் வழங்க தயாராக இருக்கிறேன்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: INDvsNZ 2nd Test, Highlights: தொடங்கியதும் அடங்கியது நியூசி., 2வது டெஸ்டில் இமாலய வெற்றி பெற்ற இந்தியா!


‛சார் சட்டப்படி தப்பு சார்...’ -பாமரனுக்கும் உரிமையை கற்றுக் கொடுத்த அம்பேத்கரின் நினைவு தினம் இன்று!