தமிழ் சினிமாவில் தற்போதைய நடிகர்களில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் தனுஷ். அவர் தற்போது துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், ஹிந்தியில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்திலும் நடித்துள்ளார். இன்று அத்ரங்கி ரே படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.


இந்தப் படங்களைத் தொடர்ந்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்துவருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.




நானே வருவேன் படத்துக்கு பிறகு தனுஷ் தெலுங்கில் பிரபல இயக்குநர்களில் ஒருவரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடிக்க இருக்கிறார். 






இந்நிலையில் சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை இயக்கியுள்ள அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இணைய இருக்கிறேன். கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என பதிவிட்டுள்ளார்.






ராக்கி படம் இன்று வெளியாகியுள்ள சூழலில் அந்தப் படத்துக்கு ஒரு தரப்பினர் பாஸிட்டிவ் விமர்சனத்தையும், மற்றொரு தரப்பினர் நெகட்டிவ் விமர்சனத்தையும் கொடுத்துவருகின்றனர்.


அதேபோல் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் அருண் இயக்கியுள்ள சாணிக்காயிதம் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அருண் மாதேஸ்வரன் ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய தியாகராஜ குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Yuvan Shankar-Vijay: 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் விஜய்-யுவன்... வருகிறதா அதிரடி அறிவிப்பு!


Bigg Boss 5 Tamil: ‛பூவைக்கோர் பூ வைத்தாய்...’ தாமரைக்கு மல்லிகை பூட்டிய ஜில்லுனு ஒரு காதல்!


Shivani Net Worth: 19 வயதிலேயே பிஎம்டபிள்யூ கார்... பிக்பாஸ் ஷிவானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?