நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான  ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கடுத்தபடியாக, விஜய் அட்லி படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் தற்போது யுவன் விஜயுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் போட்டோ ஹைதாராபாத்தில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 


 


 






முன்னதாக, விஜய் நடித்த மாஸ்டர் படத்தில்  ‘அந்த கண்ண பாத்தாக்கா’ என்ற பாடலை பாடியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோ, மீண்டும் விஜயுடன் இணைய இருக்கிறாரா அல்லது பீஸ்ட் படத்தில் பாடியிருக்கிறாரா உள்ளிட்ட கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது. ஒரு முறை இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், விஜய்க்கு எப்போது இசைமைப்பீர்கள் என யுவனிடம் கேட்டார். அந்தக் கேள்விக்கு பதிலளித்த யுவன் ஷங்கர் ராஜா தான் எப்போதும் விஜயுடன் பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.