Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.


இந்நிலையில், இந்த வாரத்தின் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்று தாமரைச்செல்வி தலைவரானார். அதனை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது.


மேலும் படிக்க: 83 Movie Review: கோப்பையை வென்ற கபில், மனதை வென்றாரா? சுடச்சுட ‛83’ ரிவியூ!


அக்‌ஷரா, சிபி, நிரூப், ராஜூ, ப்ரியங்கா, பாவனியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து சென்ற நிலையில் இன்றைய எபிசோடில் தாமரையின் மகன் வீட்டிற்கு வந்திருக்கிறார். கையில் மல்லிகைப்பூவோடு அம்மாவை பார்க்க ஓடி வந்த மகனை கட்டியணைத்து கொள்கிறார் தாமரை. ஆனந்த கண்ணீரோடு வரவேற்ற மகனை பிக் பாஸ் வீட்டை சுற்றி காண்பிக்கிறார். “அப்பா எங்கே” என தாமரை கேட்க, அவர் ஊரில் இருப்பதாக சொல்கிறார் அவரது மகன். இந்நிலையில், அடுத்து வெளியான இரண்டாவது ப்ரொமோவில், தாமரையின் கணவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி தருகிறார். இதனால் மிகுந்த சர்ப்ரைஸ் ஆகும் தாமரை, அன்பால் மகிழ்கிறார். அதனை கண்டு பிக் பாஸ் வீடே உணர்ச்சி ததும்ப பார்த்து கொண்டிருக்க, முழு விவரம் இன்றைய எபிசோடில் தெரிய வரும்.





ப்ரொமோ:2












ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்