சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி திரையுலகுக்குள் நுழைந்தவர் விக்னேஷ் சிவன். அவர் அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோரை வைத்து இயக்கிய நானும் ரௌடிதான் படம் கோடம்பாக்கத்தின் பெரிய ஹிட்களில் ஒன்று. இந்தப் படத்திலிருந்துதான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நானும் ரௌடிதான் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து படம் எதுவும் இயக்காமல் பாடல்கள் எழுதிவந்தார். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி பட தயாரிப்பிலும் விக்னேஷும், நயனும் கவனம் செலுத்திவருகின்றனர்.
விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை நயன் - விக்னேஷ் ஆகியோரின் “ரௌடி பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஹர்பஜன் சிங், பிராவோ உள்ளிட்டோரும் திரையில் தோன்றியுள்ளனர். தற்போது ஸ்ரீசாந்த் நடிப்பதன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் நான்காவது கிரிக்கெட் வீரர் இவர் ஆவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: IPL 2022: ”வெற்றிக்கனல் இன்னும் என்னுள் எரிந்துகொண்டு இருக்கிறது” - புதிய ஐபிஎல் அணிக்கு ஆலோசகரான கம்பீர் ட்வீட்
Watch Video: ரங்கன் வாத்தியாரைப் பாராட்டிய அஸ்வின்.. ரிக்கி பாண்ட்டிங்கை புகழ காரணம் என்ன?
தொழிற்சாலை விடுதிகளில் தரமான உணவு, அடிப்படை வசதிகளை உறுதிசெய்க - ராமதாஸ்