ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 479 ரன்கள் எடுத்திருந்தப் போது டிக்ளேர் செய்தது. இதை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்து. மூன்றாவது நாளான இன்று இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்நிலையில் இரண்டாம் நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் க்ரீனின் விக்கெட்டை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் எடுத்தார். அவர் க்ரீனின் விக்கெட்டை எடுப்பதற்கு முன்பாக வர்ணனையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். அப்போது அவர் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதற்கு முன்பாக ஒன்றை கூறினார். அதாவது,”க்ரீனின் ஸ்டான்ஸ் பார்ப்பதற்கு எல்பிடபிள்யூவை தவிர்க்க முயன்று வருவது போல் இருக்கிறது. ஆகவே இங்கிலாந்து வீரர்கள் அவருக்கு ஃபுல் லென்த் பந்துவீச்சை செய்து அவரை கிளின் போல்ட் செய்ய முயற்சி செய்வார்கள்” எனக் கூறினார்.
அவர் கூறியது போலவே அடுத்த பந்தில் ஸ்டோக்ஸ் ஃபுல் லென்த் வீசி க்ரீனை கிளின் போல்ட் செய்து ஆட்டமிழக்க வைத்தார். இது தொடர்பான வீடியோவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை மேற்கோள் காட்டி இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிக்கி பாண்டிங்கை பாராட்டியுள்ளார்.
அதில், ரிக்கி பாண்டிங்கின் கிரிக்கெட் அறிவை பாராட்டியுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியில் கீழ் விளையாடினார். அப்போதே அஸ்வினை ரிக்கி பாண்டிங் சிறப்பாக புகழ்ந்து வந்தார். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம் பெற டெல்லி ஐபிஎல் அணியில் அவருடைய பெஃபார்மென்ஸ் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. இந்தச் சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் ரிக்கி பாண்டிங்கை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ”வெற்றிக்கனல் இன்னும் என்னுள் எரிந்துகொண்டு இருக்கிறது” - புதிய ஐபிஎல் அணிக்கு ஆலோசகரான கம்பீர் ட்வீட்