2022 ஐபிஎல் தொடருக்கான ஆயுத்தப்பணிகள் ஆரம்பமாகிவிட்டது. அந்த வரிசையில், ஒவ்வொரு அணியும் தன் அணி வீரர்களை தக்க வைத்து கொள்ளும் ரிடென்ஷன் முடிவடைந்துள்ள நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்த செய்தியை கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி இருக்கிறார். இது குறித்து பதிவிட்டிருக்கும் அவர், ”மீண்டும் களத்தில் இறங்க பெருமை கொள்கிறேன். வெற்றி கனல் இன்னும் என்னுள் எரிந்து கொண்டு இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கின்றது” என ட்வீட் செய்திருக்கிறார். 






மேலும், பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்து வந்த ஆண்டி ஃப்ளவர் சமீபத்தில் பதவி விலகினார். இந்தநிலையில், 2022 ஐபிஎல் தொடருக்கான லக்னோ அணியானது ஆண்டி ஃப்ளவர் பயிற்சியாளராக இருப்பதை இன்று  உறுதி செய்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.  


ஜிம்பாவே கிரிக்கெட் அணிக்காக விளையாடிய ஆண்டி ப்ளவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். அதனை அடுத்து, கடந்த 2020 சீசனில் ஐபிஎல் தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.



அதேபோல், லக்னோ அணியின் கேப்டனாக பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. 


வழக்கமாக ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் தெரிவித்திருந்தது. 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண