Cooku With Comali:  தமிழ் தொலைகாட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் பெற்ற தொலைக்காட்சி என்றால் அது விஜய் டீவி. ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவிதான் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தக் காரணம், விஜய் டீவி ஒளிபரப்பிய பல ரியாலிட்டி ஷோக்கள்தான்.


குறிப்பாக விஜய் டீவி மீடியா மேஷன் எனப்படும் நிறுவனத்துடன் இணைந்து “குக்கு வித் கோமாளி” என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை ஒளிபரப்பப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின் ஐடியா இதுவரை வந்த மற்ற ரியாலிட்டி ஷோக்களை விட முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.


இந்த நிகழ்ச்சி கமர்ஷியலாகவும் பெரும் வெற்றி பெற்றது. விஜய் டிவியும் மீடியா மேஷனும் இணைந்து தொலைக்காட்சி வட்டாரத்தில் கோலோச்சிக் கொண்டு இருந்த நிலையில், திடீரென இவர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.


தாமுவுக்கு ஜோடி இவர்தானா?


இதனால் மீடியா மேஷன் நிறுவனம் விஜய் டீவிக்கு இனிமேல் எந்த நிகழ்ச்சியும் தயாரித்து வழங்கப்போவது இல்லை எனவும், ஏற்கனவே தயாரித்து வழங்கி வரும் நிகழ்ச்சிகளையும் நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.


இதனைத் தொடர்ந்து குக்கு வித் கோமாளி ஷோவின் நடுவர்களில் ஒருவரான ஷெஃப் வெங்கடேஷ் பட்டும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர் செஃப் தாமுவும் விலகுவதாக அறிவித்து, பின்னர் அதிலிருந்து பின் வாங்கினார். 


இந்நிலையில், செஃப் தாமுவுடன், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வரப்போவதாக சொல்லப்படுகிறது.   


மாதம்பட்டி ரங்கராஜ்:




தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், தேர்ந்த சமையல் கலைஞர் ஆவார். தனது தந்தையின் சமையல் பிஸ்னஸை கவனித்து வரும் இவர், சினிமா ஆர்வமும் கொண்டு இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.  இவர் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி,  நடிகர் விக்ரம், யோகிபாபு உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் ரங்கராஜ் தான் சமையல் செய்துள்ளார். இந்நிலையில் தான், செஃப் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சி உலகிலும் மாதம்பட்டி ரங்கராஜ் காலடி எடுத்து வைப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.




மேலும் படிக்க


Aranmanai 4 : தமன்னாவை நீங்க வேற மாதிரி பாப்பீங்க.. சுந்தர் சி கொடுத்த அப்டேட் தெரியுமா மக்களே..


Pa Ranjith: தங்கலானுக்குப் பிறகு பாலிவுட் எண்ட்ரி: ஹீரோ இவரா? பா.ரஞ்சித் விளக்கம்!