தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டில் மீரா ஜாஸ்மின், பிரசன்னா நடிப்பில் வெளியான கஸ்தூரி மான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து, ஜெயம் ரவியின் தாம்தூம் திரைப்படத்தில் நடித்த அவர், 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, தமிழ் நாட்டில் அதிரி புதிரி ஹிட் ஆன பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பிறகு தமிழில் மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார், தியா, பாவக் கதைகள் என கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் கார்கி என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


சாய் பல்லவியின் சமீபத்திய சமூக கருத்துக்கள் ஆரோக்கியமான  விவாதங்களை உருவாக்குகின்றன. அதே போல ஒரு நேர்காணலில் ஆணுறை, பெண்களின் உடை தேர்வு குறித்த விஷயங்களின் பின்னணியில் உள்ள பார்வையை பேசி உள்ளார்.



ஆணுறை குறித்து


தனியார் யூ ட்யூப் சேனல் ஒன்றின் பேட்டியில், ஆணுறை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லையே அது குறித்து எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "செக்ஸ் எஜுகேஷன் ரொம்ப அவசியம். எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம். காண்டம்ன்னா என்ன, அது எதனால பயன் படுத்தனும் அப்டின்ற விழிப்புணர்வு மக்களுக்கு வேணும். அது ஒரு ஃபேஷன் இல்ல, சுகாதாரம்தானே.


எப்படி கொரோனா வர்றதுக்கு முன்னாடி எல்லாரும் தடுப்பூசி போட்டுக்குறோமோ அதே மாதிரி இதுவும் நம்மை பல பிரச்சனைகளில் இருந்து காக்குற விஷயம். ஒரு வேளை மெடிக்கல் ஷாப்பில் சென்று கேட்கும்போதோ, அதனை வாங்கும் இடத்திலோ பார்ப்பவர்கள் நம்மை வேறு மாதிரி பார்ப்பார்கள் என்ற எண்ணமாக இருக்கலாம். அதனால் பலர் அதிலிருந்து விலகுறாங்கன்னு நெனைக்குறேன். ஆனா அது ரொம்ப அவசியமான ஒரு விஷயம்." என்று கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: 40 வயது பெண்ணுடன் உடலுறவு.. முதியவர் அதிர்ச்சி மரணம் - மாத்திரையா, மதுவா? விசாரணை தீவிரம்!


நான் ஏன் புடவை கட்டுகிறேன்?


உடைகளை வைத்து எடை போடும் பழக்கம் நம் மக்களிடையே உண்டு, அது குறித்து கேட்ட கேள்விக்கு, "எனக்கு சின்ன வயசுல ஒரு பிரச்சனை இதனால வந்துச்சு. ஒரு 16, 17 வயசுல எங்க அப்பா அம்மாவோட அனுமதியோட ஒரு காஸ்ட்யூம் கொடுத்து டான்ஸ் ஆடினேன். அந்த விடியோவ பாஸ் பண்ணி என் உடம்பை பாக்குறாங்கன்னு அப்புறம் தெரிஞ்சிக்கிட்டேன். அது முதல்ல எனக்கு ரொம்ப ஷாக்கிங்கா இருந்தது. அது என்னை ரொம்ப தொந்தரவு செஞ்சுது, அதனால நான் இந்த வழிய பயன்படுத்துறேன். புடவைகள்ல எப்போவுமே இருக்குறது மனதளவில் ஒரு நிம்மதிய தருது. இவங்க அப்படி பாக்குறாங்க அவங்க அப்படி பாக்குறாங்க அப்டின்ற பயம் இல்லாம இருக்கு" என்றார்.



உடையை வைத்து எடைபோட வேண்டாம்


மேலும், "நான் வீட்ல ரொம்ப கோவப்படுவேன், கத்துவேன், என்கிட்ட நெறைய கெட்ட பழக்கம் இருக்கு. நான் இந்த மாதிரி ட்ரெஸ் பண்றேன் அப்டின்றதால மட்டும் நான் நல்ல பொண்ணு கிடையாது. நானும் நெறைய தப்பு பண்ணுவேன். அதனால போட்ற ட்ரெஸ்க்கும் கேரக்டருக்கும் சம்மந்தம் கிடையாது. நாளைக்கு எனக்கு ஒரு பொண்ணு பிறந்து, அவ சின்ன ட்ரெஸ் எல்லாம் போட்றான்னா, அவ நம்புறா நம்மள யாரும் தப்பா பாக்க மாட்டாங்கன்னு. அந்த நம்பிக்கைய நான் உடைக்க மாட்டேன்." என்று கூறினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.